Tuesday, November 3, 2009

தேடலை மீண்டும் தொடரு


தேடலை மீண்டும் தொடரு


ஆனந்தனுக்கு ஆன்மீக தாகம் அதிகமாகவே இருந்தது. தனக்கு ஒரு குரு வேண்டி பல இடங்களில் அலைந்தான்.

பல ஆசிரமங்களுக்கு சென்றான் ஆனால் அங்கிருப்பவர்களுக்கும் இவனுக்கும் ஒத்து வரவில்லை. அதிக பட்சம் சில நாட்கள் மட்டுமே அவனால் அங்கிருக்க முடியும். அதற்குள் மன ரீதியாக வித்தியாசம் ஏற்பட்டு வெளியேறி விடுவான்.

தனக்கு ஆன்மீக குரு கிடைப்பார் என்ற நம்பிக்கையே ஆனந்துனுக்கு போய்விட்டது. அந்த சமயம் நண்பன் ஒரு முனிவரை பற்றி சொன்னான். கடைசியாக முயற்சி செய்ய ஆனந்து புறப்பட்டான்.

அங்கு முனிவர் சந்தமாக நிஷ்டையில் இருப்பார் என பார்த்தல் அவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு முன்பு சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். தனக்கு எங்கும் சரியான குரு கிடைக்காத தனது நிலையை சொல்லி வருந்தினான்.ஒரு புறம் இதை கேட்டு கொண்டே தோட்டத்தில் களைகளை பறித்து கொண்டிருந்தார் முனிவர்.

தோட்டத்து கிணற்றுக்கு அருகில் ஆனந்தனை அழைத்து வந்து, ஒரு வாளியை கொடுத்து தண்ணீர் இரைக்க சொன்னார்.

பின்பு அவர் தனது களை பறிக்கும் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.தண்ணீர் எடுக்க முயற்சித்தாலும் வாளியில் தண்ணீர் நிரம்பாததை உணர்த்த ஆனந்த்தான், வாளியை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து பார்த்தான். வாளியின் கீழ் புறத்தில் பெரிய ஓட்டை ஒன்று இருந்ததை உணர்ந்தான்.

நேரே முனிவரிடம் வந்து, "குருவே... ஓட்டை வாளியை கொடுத்தால் நீர் எப்படி இரைப்பது?" என கேட்டான் ஆனந்தன்.

மெல்லிய புன்னகையுடன் முனிவர் அருகில் வந்து...அந்த வாளியை வங்கி கொண்டார். பின்பு தொடர்ந்தார்," ...ஆனந்தா , இங்கு அல்ல எங்கு தேடினாலும் உனது குரு கிடைக்க மாட்டார். குறை நீ சந்தித்த குருமார்களிடம் அல்ல உன்னிடம் தான். குருவை அடையவேண்டியவர்கள் முதலில் கிழ்படியும் தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.வாளியில் உள்ள ஓடையை கண்டவுடன்...உனது புத்திசாலித்தனம் வேலை செய்ததே தவிர , குருவை பற்றி நீ சிந்திக்கவில்லை.

குருவின் செயலில் எதாவது ஒரு அர்த்தம் இருக்கம் என நீ செயல்பட்டிருந்தால் உனக்கு எப்பொழுதோ குரு கிடைத்து இருப்பார்.... உனது குருவின் தேடலை மீண்டும் தொடரு...எனது ஆசிர்வாதங்கள் ...

ஆனந்தனின் மனதில் இருந்த அறியாமை இருள் விலகியது....புதிய ஒளியுடன் புறப்பட்டான்...