Thursday, December 9, 2010

ஒரு பென்சிலுக்கும் ரப்பருக்கும் நடந்த உரையாடல்

 

இது ஒரு பென்சிலுக்கும் ரப்பருக்கும் நடந்த உரையாடல்

ஒரு நாள் பென்சிலும், ரேசரும் கதைத்துக் கொண்டிருந்தன. அப்போது பென்சில் ரேசரிடம் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலையிலுள்ளவன் நான். எப்போது நான்  தப்புச் செய்தாலும் மற்றவர்கள் அறியும் முன்பாகவே அந்தத் தப்பை அழித்துத் திருத்துகின்றாய். அதே நேரத்தில் நீயும் சிறிது சிறிதாக உருவில் குறைந்து கொள்கின்றாய். இந்த உதவிகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? ஆகவே தான் மன்னிப்புக் கேட்கின்றேன்.


இதைக்கேட்ட ரப்பர், இதிலே மன்னிப்புக் கேட்பதற்கு ஒன்றுமில்லை. மக்கள் உன் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு, நீ உதவுகின்றாய். நானும் ஒரு வகையில் உனக்கு உதவுகின்றேன். நாளை நான் அழிந்ததும், உனக்கு இன்னொரு ரப்பர் உதவிக்கு வரும். ஆகவே உன்னை நான் தவறாக நினைக்கப்போவதில்லை. நீ கவலையை விடு என்று சமாதானமாகக் கூறியது.


பெற்றோர்களும் இந்த ரப்பரைப் போல் தான்.

 

குழந்தைகளின் தவறுகளை அழித்துத் திருத்தி அவர்களைத் தம் நண்பர்கள்  மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்..


இதனால் அவர்கள் அடிபட்டு...மெலிந்து நலிந்து போய் கடைசியில் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டே போய் விடுகிறார்கள்.. 

 

ஆனால் இந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களாகி வேறு ரப்பராக தங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்கொள்கின்றனர்.


எப்படி இருந்தாலும் அந்த பெற்றோர்கள் தான் குழந்தைகளின் வளர்ச்சிகளைக் கண்டு சந்தோஷப்படுகின்றார்கள்.