Tuesday, March 29, 2011

புகைக்கவும் குடிக்கவும் நீங்கள் செலவு

விமானநிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்திலிருந்து, புகை பிடித்தபடியே மது அருந்திக் கொண்டிருந்தாராம் ஒருவர். 

 

அருகிலிருந்த ஒருவர் அவரிடம்சென்று, "புகைபிடிக்கவும், மது அருந்தவும் ஒருநாளைக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள்?" என்று கேட்டாராம்.

 

அதற்கு, புகை பிடித்துக்கொண்டிருந்தவர், "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாராம்.

 

அதற்கு அந்த மனிதர், "புகைக்கவும் குடிக்கவும் நீங்கள் செலவு செய்யும் பணத்தைச் சேமித்தால், நீங்கள் சொந்தமாக ஒரு விமானமே வாங்கிவிடலாம்" என்றாராம்.

 

அதற்கு அந்தப் புகைபிடிக்கிறவர், "நீங்கள் புகைப்பதோ, மது அருந்துவதோ கிடையாதா?" என்று அந்த மனிதரைப் பார்த்துக் கேட்டாராம்.

 

 "இல்லை" என்று மறுத்தாராம் அந்த மனிதர்.

 

 "அப்படியானால், அங்கே நிற்கிற விமானம் உங்களுடையதா?" என்று கேட்டாராம் புகைபிடித்தவர்.

 

 "இல்லை" என்று மறுத்தாராம் அந்த மனிதர்.

 

 "உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி. ஆனால்,அந்த விமானம் என்னுடையது" என்றாராம் அந்தப் புகைபிடித்துக்கொண்டிருந்த மனிதர்.

 

அங்கே, புகைபிடித்தபடி மதுஅருந்திக்கொண்டிருந்த அந்த மனிதர் வேறு யாருமல்ல, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான விஜய் மல்லையாதான்.

 

இதிலே, நாம விளங்கிக்கவேண்டிய தத்துவம் என்னன்னா, ஆகாத இடத்தில் அறிவுரை சொன்னா அது நமக்கே சிலசமயம் ஆப்பு வைத்துக் கொள்வதாகத் தான் அமையும் என்பதுதான்.