Friday, August 31, 2012

சாப்பிடப் பழகுவோம்!


''சாப்பாட்டுக்காகத்தான் நிற்க நேரம் இல்லாமல் ஓடுகிறோம். ஓடி ஓடி உழைக்கிறோம்... ஆனால், அந்தச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என எத்தனை பேருக்குத் தெரிகிறது? சாப்பாட்டில் நாம் காட்டும் அலட்சியம்தான் பின்னாளில் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே வேட்டு வைக்கிறது!'' 


அதிகாலை உணவு அதிமுக்கியம்!

இரவுச் சாப்பாட்டுக்கும் காலை நேரச் சிற்றுண்டிக்கும் இடையேயான இடைவெளி அதிகம். எனவே, காலை உணவினைத் தவிர்க்கவே கூடாது.

உணவை தள்ளிப்போடக் கூடாது!


வேலை வேலை என்று காரணம் சொல்லி சிலர் நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள். இது தவறு. உணவு செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோ குளோரிக் அமிலம், குறித்த நேரத்தில் சுரக்க ஆரம்பிக்கும்போதே, பசி உணர்வு ஏற்படுகிறது. அப்போது உடனடியாக நாம் சாப்பிடாவிட்டால், சுரந்த அமிலமானது இரைப்பைச் சுவரை அரிக்க ஆரம்பித்துவிடும். இதனைத் தொடர்ந்து ஏப்பம், வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். நாளடைவில், இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் இந்த அமில அரிப்பினால், புண்கள் தோன்றும். இந்த வயிற்றுப் புண்ணே பெப்டிக் அல்சராக (Peptic Ulcer)  மாறிவிடும், எச்சரிக்கை.

சாப்பிட வாங்க...

வயிற்றைக் காலியாக வைத்திருப்பது எந்த அளவு தவறோ, அதே அளவு வயிறு முட்ட சாப்பிடுவதும் தவறு. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுங்கள். அதுவும் ஒரே வேளையில் மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அதீத வேலை வைப்பதோடு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு நான்கு அல்லது ஐந்து வேளைகளாகக்கூட உணவைப் பிரித்துச் சாப்பிட்டுப் பழகலாம். இது எளிதான செரிமானத்துக்கு உதவும்.

அடிக்கடி டீ...

டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகாலையில் ஒருமுறை டீ குடிக்கலாம். பின்னர் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையிலான மாலை வேளையில் ஒரு கோப்பை டீ குடிக்கலாம். இதைத் தவிர்த்து அடிக்கடி காபி, டீ அருந்துவது பசி உணர்வை மட்டுப்படுத்தி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

சாப்பிட்ட உடனேயே சாய்ந்துவிடலாமா?

இரவு சாப்பிட்ட உடன் தூங்கச் சென்றால் அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை எனப் பல பிரச்னைகள் உண்டாகும். சாப்பிட்ட உணவானது இரைப்பை, சிறுகுடல் எனச் செரிமானப் பாதையைக் கடப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தேவைப்படும். ஆனால், இரவில் சாப்பிட்டு முடித்ததும் தூங்க ஆரம்பித்துவிட்டால், சாப்பிட்ட உணவானது செரிமானப் பாதையைக் கடக்கவே சிரமப்படும். அந்த நேரத்தில் செரிமான உறுப்புகளும் ஓய்வு நிலையில் இருப்பதால், உணவானது விரைவாக ஜீரணிக்கப்படாமல், நெஞ்சு எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவை உண்ட பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமாவது விழித்திருந்து அதன் பிறகே படுக்கைக்குச் செல்லலாம். சாப்பிட்ட உடன் சில நூறு அடிகள் நடப்பதும் செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.

சர்க்கரையில் வேண்டும் அக்கறை!

தென்னிந்தியர்களைவிடவும் அதிக அளவில் இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடக்கூடியவர்கள் வட இந்தியர்கள். ஆனாலும், சர்க்கரை நோய்ப் பாதிப்பு என்னவோ தென்னிந்தியர்களைத்தான் அதிக அளவில் பாதிக்கிறது. இதற்குக் காரணம், நம்முடைய அரிசி வகை உணவுகள்தாம். அரிசி - கோதுமை என இரண்டு தானியங்களிலுமே கலோரி அளவு சமமாகவே உள்ளது. ஆனால், அரிசியைப் பட்டை தீட்டி வெண் நிறமாக்கும்போது, அதில் உள்ள நார்ச் சத்து வீணாகிவிடுகிறது. ஆனால், கோதுமையில் உள்ள நார்ச் சத்தினை இப்படி எல்லாம் வீணாக்காமல் சமைத்து உண்ணுகிறார்கள் வட இந்தியர்கள். அதிலும் குறிப்பாக ரொட்டி போன்ற கடின வகை உணவுகளை நன்றாகக் கடித்து மென்று விழுங்கும்போது உணவோடு உமிழ்நீரும் கலந்து கூழாக்கப்படுகிறது. உணவை ஜீரணிக்கச் செய்வதில் உமிழ்நீரின் பங்கு முக்கியமானது. ஆனால், நார்ச் சத்து இல்லாத அரிசி சாதம் போன்றவற்றை கடித்துச் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாததால், அவசரம் அவசரமாக ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே அள்ளி விழுங்கிவிடுகிறோம். இப்படித் திடுமென இரைப்பைக்குள் வந்து விழும் அரிசி உணவானது எளிதில் செரித்து மொத்தமாகக் கலோரியை வெளிப்படுத்தும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் தடாலடியாக எகிறிப்போகிறது.

சாப்பிடப் பழகுங்கள்

டி.வி. பார்த்தபடியோ அல்லது புத்தகம் படித்தபடியோ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் என்ன சாப்பிடுகிறோம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவு தெரியாமல் சாப்பிட்டுவிடுவோம். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியான சூழலில் சாப்பிடுவதே நிறைவைத் தரும். ஆனால், சாப்பாட்டு வேளையில் சத்தமாகப் பேசுவது, சிரிப்பது வேண்டாம். ஏனெனில், உணவானது புரையேறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, உணர்ச்சிகரமாக எதையும் விவாதிக்காமல் இருப்பதே நல்லது.

 உணவுப் பக்குவம் மற்றும் சத்துக்கள்குறித்து குறிப்புகள்

 அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்ததும் திட உணவைச் சாப்பிட முடியாது. அதனால், அவரவர் விருப்பப்படி தண்ணீர், பால், காபி, டீ என்று திரவமாக அருந்தலாம். பின்னர் காலை எட்டு மணிக்கு முன்னரே கட்டாயம் திட உணவு சாப்பிட்டாக வேண்டும்.

 இளநீர், ஜூஸ், பழம்... இவற்றில் ஏதாவது ஒன்றை காலை பத்து மணி அளவில் சாப்பிடலாம். பிற்பகல் நான்கு மணிக்குச் சுண்டல், பயிறு, பொட்டுக்கடலை, பட்டாணி, பழம், மோர் அல்லது பிஸ்கட், சாண்ட்விச்... இவற்றில் ஏதாவது ஒன்றைச் சிறுதீனியாகச் சாப்பிடலாம். வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய்ப் பலகாரங்களை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

 பருப்பில் உள்ள கரைகிற நார்ச் சத்தும் கொழுப்பும் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கும். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு, பருப்பில் உள்ள புரோட்டின் சத்து மிகவும் அவசியம். ஆனால், பருப்பு சேர்த்துக்கொண்டால் வாயுத் தொல்லை. ஆகையால், சமைப்பதற்கு முன்பு பருப்பினைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்துப் பயன்படுத்தினால், இந்த வாயுத் தொல்லை இருக்காது. மேலும், நமது சமையல் முறையில் (ரசம்) சேர்க்கப்படும் சீரகம், மஞ்சள், பூண்டு, பெருங்காயம் போன்றவையும் வாயுவைத் தடுப்பதோடு ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கும்.

 மாவுச் சத்துக்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்னை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இவர்கள் சுண்டல், பீன்ஸின் வெளிப்புறத் தோல் போன்றவற்றை உணவோடு சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.

 சாதாரணமாக சாப்பிடுவதற்கு முன்பு அரை டம்ளர் தண்ணீர் அருந்தலாம். சாப்பாட்டின்போது தாகம் அல்லது விக்கல் ஏற்பட்டால் மட்டுமே நீர் அருந்தவேண்டும். சாப்பிட்டு முடித்த பின்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.

 சமச்சீர் உணவு என்பது தானியம், பருப்பு, காய்கறி-பழம், பால், எண்ணெய் என ஐந்து வகையாக இருக்கின்றன. நமது தென்னிந்திய உணவு வகைகளில் இந்த ஐவகை சத்துக்களும் இருப்பதால், நம்முடைய உணவு வகைகள் சமச்சீர் உணவே!

பெற்றோரும் குழந்தைகளே!


யதான தாய் தன் மகனுடன் தோட்டத்தில் அமர்ந்து இருக்கிறாள். ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் சிறு பறவையைக் காட்டி, 'மகனே, அது என்ன பறவை?' என்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அந்தப் பறவை வேறு மரத்தில் போய் அமர்கிறது. மறுபடியும் தாய் அது என்ன பறவை எனக் கேட்கிறாள். 'மைனா' என்கிறான் மகன். அடுத்து வேறு மரத்துக்கு அந்தப் பறவை தாவுகிறது. மூன்றாவது முறையாக அம்மா அதே கேள்வியைக் கேட்கிறாள். ''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அதான் சொல்றேன்ல... அது மைனான்னு...'' என எரிந்து விழுகிறான் மகன். அந்தத் தாய் வீட்டுக்குள் போய் தன் டைரியை எடுத்து வருகிறாள். மகனிடம் கொடுக்கிறாள். 

''என் மகனுக்கு அப்போது இரண்டு வயது. நானும் என் மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மைனா ஒன்று பறந்து வர 'அது என்ன?' எனக் கேட்டான் என் மகன். 'மைனா' என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா' என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்!''  

சென்ற வருடத்தின் சிறந்த குறும்படமாக சர்வதேச விருது பெற்ற  படத்தின் காட்சி இது. அலுவலகம், நட்பு வட்டாரம், ஃபேஸ்புக் என எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் பெற்றோருக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம்? தள்ளாத வயதில் பேரன் - பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலத்தில் பல பெற்றோர்கள் வறுமையிலும் தனிமையிலும் தவிக்கும் அவலத்தை எப்படித் தவிர்ப்பது?

''சம்பாத்தியத்தை நோக்கியே சுழலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு வயதான பெற்றோரைக் கவனிக்க நேரம் இல்லை. நாலு வார்த்தை பரிவாய்ப் பேசக்கூட பொறுமை இல்லை.

வறுமையில் வாடும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களோ உழைப்பதற்குத் தயாராக இருந்தும், உடலில் வலு இல்லாமல், ஒடுங்கிக்கிடக்கின்றனர். இதுதான் இன்றைய வயோதிகப் பெற்றோர்களின் யதார்த்த நிலை. இதற்கு உதாரணமாக நான் பார்த்த முதியவரைப் பற்றிச் சொல்கிறேன்.  

80 வயது வயோதிகரின் மருமகள், 'என் மாமனார் நடக்கவே முடியாமல் சோர்ந்து விழுகிறார். கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா?' என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க' என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்' என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்' என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா?' என்று நான் வியந்து கேட்க, 'இல்லை டாக்டர், லென்ஸ் போட்டிருக்கா. காலேஜ் படிக்கிறதால அவ டிரெஸுக்கு மேட்சா கலர் கலரா லென்ஸ் வாங்கித் தந்திருக்கேன்' என்று பெருமிதத்துடன் சொன்னார் அந்த மருமகள்.  

படிக்கும் மகள், மகனுக்காக லட்சங்களைச் செலவழிக்கும் அதே பெற்றோர், தங்களைப் பெற்றவர்களின் சின்னச் சின்ன அவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய மறந்துவிடுகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, பிரச்னைகளைப் புரிந்து, பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாய் இருக்கும்''

பேச்சு சுதந்திரம் பேரானந்தம்!

பெரியவர்களின் வடிகாலே... பேச்சுதான். தேக்கிவைத்த ஆசைகள், கனவுகள், இன்ன பிற நினைவுகளைப் பற்றிப் பேசும்போது, அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 'நீங்க படிச்ச காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கீங் களா?' என்று நீங்களோ அல்லது பேரப் பிள்ளைகளோ கேட்கும்போது, பாட்டியின் முகத்தில் தெரியும் பரவசத்தை வார்த்தைக ளால் விவரிக்க முடியாது. விசேஷ நாட்களில் பாடச் சொல்லி, பாட்டியின் கச்சேரியை ரசிக்கலாம். கை வேலைப்பாட்டில் திறமை இருந்தால், அவர் செய்த பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். தனக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஒரு வாய்ப்பும் மன பாரத்தை இறக்கிவைத்த சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

அம்மாக்களைப் பொருத்தவரை என்னதான் வயதாகிவிட்டாலும் அவர்களுக்கு அடுக்களையில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தனது மகனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் தினம் தினம் என்று இல்லாவிட்டாலும் நாள்  கிழமைகளின் போதாவது தன் கையால் எதையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். அப்படிப்பட்டவர் என்றாவது ஒரு நாள் கேசரியில் சர்க்கரை போட மறந்திருக்கலாம். அதனால், 'அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...' என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உணவே மருந்து

வயதான பெற்றோர்களுக்குக் குறைவான கலோரி உள்ள சத்தான உணவே போதுமானது. எலும்புகளை வலுவாக்கக் கொள்ளு, புரதச் சத்துக்கு காளான், கோதுமை, கொண்டைக் கடலை, பட்டாணி இவற்றைத் தினமும் சேர்த்துக் கொடுக்கலாம். ஓட்ஸில் அதிக புரதம், கலோரி, நார்ச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பதால் அது அவர்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும். அரிசியைக் குறைத்து கேழ்வரகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சுண்ணாம்புச் சத்து சேரும். எடை அதிகரிக்கும் மாவுச் சத்துள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகத் தந்தால் போதும். இரும்புச் சத்து நிறைந்த கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் இருக்கும். எந்தச் சாப்பாடாக இருந்தாலும் உப்பு குறைவாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உப்பின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், சோர்வு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அவர்கள் தடுக்கலாம்.

உற்சாகம் தரும் உடற்பயிற்சி

60 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும்கூட வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 35 முதல் 45 சதவிகிதம் குறைவு. ஐந்து மணி நேரம் நடந்தால், 50 சதவிகிதம் மாரடைப்பு வாய்ப்பு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் அப்பா - அம்மாவை அருகில் இருக்கும் பூங்கா, மைதானத்துக்குச் சென்று உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சி செய்யச் சொல்லலாம். விடியற்காலையில் நடப்பது அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மற்றவர்களுடன் கலந்து உரையாடும்போது மனதில் உற்சாகம் பாயும். நல்ல உறக்கம் கிடைக்கும். பார்வைக் கோளாறு, மூட்டு வலி மற்றும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், அடையாள அட்டையை அவர்களது பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்புங்கள்.    

தடுக்கி விழுவதைத் தவிர்க்கலாம்

வயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடும். இதனால், எலும்பு முறிய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க அவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு அவர்கள் புழங்கும் அறை, கழிப்பறை மற்றும் நடக்கும் இடங்களில் சொரசொரப்பான டைல்ஸைப் பதிப்பது நல்லது. அவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆங்காங்கே, பிடிமானத்துக்கு கைப்பிடிகளைப் பொருத்துவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மிருதுவான செருப்பாக இல்லாமல், முள் போல் பதிக்கப்பட்ட ரப்பர் செருப்புகளை வாங்கித் தரலாம். வெஸ்டர்ன் டாய்லெட் மூட்டு வலிப் பிரச்னை வராமல் தடுக்கும். குளிக்கும் அறை, நடக்கும் இடங்கள், தூங்கும் அறை இவற்றில் போதிய வெளிச்சம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தள்ளாடியபடி நடப்பவர்களுக்குக்  கைப்பிடி (Walking stick) அல்லது வாக்கர் (Walker) கொடுக்கலாம்.  

நோய்க்கு நிரந்தரத் தீர்வு

முதுமையில் மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனப்பதற்றம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறையும். நாளடைவில், தன்னையே மறக்கும் நிலை உருவாகும். வீட்டிலே சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யலாம். இதனால் மறதி நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.

பொதுவாக வயதானவர்களுக்கு எந்த வேளை எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பார்த்து எடுத்து சாப்பிடத் தெரியாது. பெற்றெடுத்த பிள்ளைகள் வேளாவேளைக்குத் தங்கள் கையால் மருந்து கொடுத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்குச் சாத்தியம் இல்லை என்றால், குறைந்தபட்சம் எந்த வேளைக்கு எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாமே தனித்தனி சின்ன பொட்டலங்களாக மடித்துவைத்துவிட்டு வந்தால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், 'ஒரு வேளை மறந்துவிட்டோமே...' என்று அடுத்த வேளை மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடக் கூடாது. கை - கால்களில் எரிச்சல் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். நோய் வருமுன் காப்பதற்கு வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண், பல், காது ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வைப்பது அவசியம்.

தனிமையைத் தவிர்க்கவும்

முதுமையின் விரோதி தனிமை. முதுமையில் தனிமையோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகரிக்கும். தள்ளாத வயதில் கணவன் - மனைவி இருவரில் ஒருவரின் இழப்பு மற்றொருவருக்குத் தாங்க முடியாத தளர்வை ஏற்படுத்திவிடும். இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றாலும், கூடப்பிறந்த உறவுகள், அவர்களுடன் வசித்த, படித்த, பணிபுரிந்த நட்பு வட்டாரங்களைத் தேடிப் பிடித்து வீட்டுக்கே வரவழைத்து வேதனையை மறக்கச் செய்யலாம். பெற்றோர்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்குச் செல்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால் உறவு - நட்பு வட்டாரங்களுக்கு அருகில் பெற்றோரைக் குடி அமர்த்தலாம். அவ்வப்போது போன் மூலமாக நலம் விசாரிக்கலாம். இதனால், நீங்கள் அருகிலேயே இருப்பதுபோன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். கேரம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தாருங்கள். குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடி மகிழ்வதைப் பாருங்கள். உங்களுக்கும் ஆனந்தம் பொங்கும்.

தொல்லை இல்லாத் தூக்கம்

வயது ஏற ஏறத் தூக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளில், அவர்களுக்குக் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். முடிந்த வரை பகலில் தூங்காமல் ஈசி சேரில் சாய்ந்தபடி அவர்களை ஓய்வெடுக்க ஆலோசனை சொல்லுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவைக் கொடுத்துவிடுங்கள். அதுவும் கெட்டியான உணவாக இல்லாமல், நீராகாரமான உணவாக இருப்பது நல்லது. சூடான, குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கக் கொடுக்காதீர்கள். தூங்கப் போகும் சமயத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டி இருக்கும். பெற்றோரின் அறையில் அதிக சத்தம் இல்லாத, அவர்களுக்குப் பிடித்த இனிமையான இசையைத் தவழவிடுங்கள். நிம்மதியாகத் தூங்குவார்கள்!

All About Yellow Fever and Vaccination

Inoculation Centers in India:

DELHI

Yellow Fever Vaccination Centre
Airport Authority of India Quarters
T1 Building
Near Mahipalpur Fly Over
Ph : 011 - 2565 2129
Timings = 2-4PM (Registrations from 10AM, best to register early as it's only done in batches of 10..)
Day = Tue/Thu

Public Health Laboratory
Municipal Corporation, Town Hall, Alipur Road
Timings: Fri :1000 - 1200 hrs
Tel: 2397 2058

Dr. Ram Manohar Lohia Hospital. Room No. 11 & 12
Timings: Wed & Sat 1100 to 1230 hrs
Tel: 2336 5525

International Inoculation Center
Mandir Marg, New Delhi - 110001
Timings: Wed & Fri : 1330 to 1400 hrs
Tel: 2336 2284

CHENNAI
King Institute of Preventive Medicine, Guindy
Port Health Officer/ Assistant Port Health Officer/ Assistant Airport Health Officer Port Health Organization

COCHIN
Port Health Organization

GOA
Urban Health Centre, Panaji

HYDERABAD
Institute of Preventive Medicine

JAMNANAGAR
Irwin Hospital

KANDLA
Port Health Organization

KASAULI
Central Research Institute

KOLKATTA
All India Institute of Hygiene and Public Health
Health Organization, Dum Dum Airport
Port Health Organization

LUCKNOW
Balrampur Hospital

MARMUGAO
Port Health Organization

MUMBAI
Health Office
Mumbai Airport
Port Health Organization
Seamen Medical Examination Organization
Nav Bhawan

PORBANDER
Office of the Civil Surgeon

VISHAKHAPATNAM
Port Health Organization

All About Yellow Fever

Mark Gershman, J. Erin Staples

Yellow fever virus (YFV) is a single-stranded RNA virus that belongs to the genus Flavivirus.

Vectorborne transmission occurs via the bite of an infected mosquito, primarily Aedes or Haemagogus spp. Nonhuman and human primates are the main reservoirs of the virus, with anthroponotic (human-to-vector-to-human) transmission occurring. There are 3 transmission cycles for yellow fever: sylvatic (jungle), intermediate (savannah), and urban.

  • The sylvatic (jungle) transmission cycle involves transmission of the virus between nonhuman primates and mosquito species found in the forest canopy. The virus is transmitted via mosquitoes from monkeys to humans when the humans encroach into the jungle during occupational or recreational activities.
  • In Africa, an intermediate (savannah) cycle involves transmission of YFV from tree hole-breeding Aedes spp. to humans living or working in jungle border areas. In this cycle, the virus may be transmitted from monkeys to humans or from human to human via these mosquitoes.
  • The urban transmission cycle involves transmission of the virus between humans and urban mosquitoes, primarily Aedes aegypti.

Humans infected with YFV experience the highest levels of viremia and can transmit the virus to mosquitoes shortly before onset of fever and for the first 3–5 days of illness. Given the high level of viremia, bloodborne transmission theoretically can occur via transfusion or needlesticks.

Yellow fever occurs in sub-Saharan Africa and tropical South America, where it is endemic and intermittently epidemic (see Tables 3-21 and 3-22 for a list of countries with risk of YFV transmission). Most yellow fever disease in humans is due to sylvatic or intermediate transmission cycles. However, urban yellow fever occurs periodically in Africa and sporadically in the Americas. In Africa, natural immunity accumulates with age, and thus, infants and children are at highest risk for disease. In South America, yellow fever occurs most frequently in unimmunized young men who are exposed to mosquito vectors through their work in forested or transitional areas.

Table 3-21. Countries with risk of yellow fever virus (YFV) transmission1

AFRICA CENTRAL AND SOUTH AMERICA
Angola
Benin
Burkina Faso
Burundi
Cameroon
Central African Republic
Chad2
Congo, Republic of the
Côte d'Ivoire
Democratic Republic of the Congo2
Equatorial Guinea
Ethiopia2
Gabon
Gambia, The
Ghana
Guinea
Guinea-Bissau
Kenya2
Liberia
Mali2
Mauritania2
Niger2
Nigeria
Rwanda
Senegal
Sierra Leone
Sudan2
Togo
Uganda
Argentina2
Bolivia2
Brazil2
Colombia2
Ecuador2
French Guiana
Guyana
Panama2
Paraguay
Peru2
Suriname
Trinidad and Tobago2
Venezuela2

1Countries/areas where "a risk of yellow fever transmission is present," as defined by the World Health Organization, are countries or areas where "yellow fever has been reported currently or in the past, plus vectors and animal reservoirs currently exist" (see the current country list within the International Travel and Health publication (Annex 1) at www.who.int/ith/en/index.htmlExternal Web Site Icon).

2These countries are not holoendemic (only a portion of the country has risk of yellow fever transmission). See Maps 3-18 and 3-19 and yellow fever vaccine recommendations (Yellow Fever and Malaria Information, by Country) for details.

Table 3-22. Countries with low potential for exposure to yellow fever virus (YFV)1

AFRICA
Eritrea2
São Tomé and Príncipe3
Somalia2
Tanzania3
Zambia2

1Countries listed in this table are not contained on the official WHO list of countries with risk of YFV transmission (Table 3-21). Therefore, proof of yellow fever vaccination should not be required if traveling from one of these countries to another country with a vaccination entry requirement (unless that country requires proof of yellow fever vaccination from all arriving travelers; see Table 3-24).
2
These countries are classified as "low potential for exposure to YFV" in only some areas; the remaining areas of these countries are classified as having no risk of exposure to YFV.
3
The entire area of these countries is classified as "low potential for exposure to YFV."

A traveler's risk for acquiring yellow fever is determined by various factors, including immunization status, location of travel, season, duration of exposure, occupational and recreational activities while traveling, and local rate of virus transmission at the time of travel. Although reported cases of human disease are the principal indicator of disease risk, case reports may be absent because of a low level of transmission, a high level of immunity in the population (because of vaccination, for example), or failure of local surveillance systems to detect cases. This "epidemiologic silence" does not equate to absence of risk and should not lead to travel without the protection provided by vaccination.

YFV transmission in rural West Africa is seasonal, with an elevated risk during the end of the rainy season and the beginning of the dry season (usually July–October). However, YFV may be episodically transmitted by Ae. aegypti even during the dry season in both rural and densely settled urban areas.

The risk for infection in South America is highest during the rainy season (January–May, with a peak incidence in February and March). Given the high level of viremia that may occur in infected humans and the widespread distribution of Ae. aegypti in many towns and cities, South America is at risk for a large-scale urban epidemic.

From 1970 through 2010, a total of 9 cases of yellow fever were reported in unvaccinated travelers from the United States and Europe who traveled to West Africa (5 cases) or South America (4 cases). Eight (88%) of these 9 travelers died. There has been only 1 documented case of yellow fever in a vaccinated traveler. This nonfatal case occurred in a traveler from Spain who visited several West African countries during 1988.

The risk of acquiring yellow fever is difficult to predict because of variations in ecologic determinants of virus transmission. For a 2-week stay, the risks for illness and death due to yellow fever for an unvaccinated traveler traveling to an endemic area in:

  • West Africa are 50 per 100,000 and 10 per 100,000, respectively
  • South America are 5 per 100,000 and 1 per 100,000, respectively

These estimates are a rough guideline based on the risk to indigenous populations, often during peak transmission season. Thus, these risk estimates may not accurately reflect the true risk to travelers, who may have a different immunity profile, take precautions against getting bitten by mosquitoes, and have less outdoor exposure.

The risk of acquiring yellow fever in South America is lower than that in Africa, because the mosquitoes that transmit the virus between monkeys in the forest canopy in South America do not often come in contact with humans. Additionally, there is a relatively high level of immunity in local residents because of vaccine use, which might reduce the risk of transmission.

Asymptomatic or clinically inapparent infection is believed to occur in most people infected with YFV. For people who develop symptomatic illness, the incubation period is typically 3–6 days. The initial illness presents as a nonspecific influenzalike syndrome with sudden onset of fever, chills, headache, backache, myalgias, prostration, nausea, and vomiting. Most patients improve after the initial presentation. After a brief remission of hours to a day, approximately 15% of patients progress to a more serious or toxic form of the disease characterized by jaundice, hemorrhagic symptoms, and eventually shock and multisystem organ failure. The case-fatality ratio for severe cases with hepatorenal dysfunction is 20%–50%.

The preliminary diagnosis is based on the patient's clinical features, places and dates of travel, and activities. Laboratory diagnosis is best performed by:

  • Serologic assays to detect virus-specific IgM and IgG antibodies. Because of cross-reactivity between antibodies raised against other flaviviruses, more specific antibody testing, such as a plaque reduction neutralization test, should be done to confirm the infection.
  • Virus isolation or nucleic acid amplification tests performed early in the illness for YFV or yellow fever viral RNA. However, by the time more overt symptoms are recognized, the virus or viral RNA is usually undetectable. Therefore, virus isolation and nucleic acid amplification should not be used for ruling out a diagnosis of yellow fever.

Clinicians should contact their state or local health department or call 800-CDC-INFO (800-232-4636) for assistance with diagnostic testing for yellow fever infections and for questions about antibody response to vaccination.

Treatment is for symptoms. Rest, fluids, and use of analgesics and antipyretics may relieve symptoms of fever and aching. Care should be taken to avoid certain medications, such as aspirin or nonsteroidal anti-inflammatory drugs, which may increase the risk for bleeding. Infected people should be protected from further mosquito exposure (staying indoors or under a mosquito net) during the first few days of illness, so they do not contribute to the transmission cycle.

Personal Protection Measures

The best way to prevent mosquitoborne diseases, including yellow fever, is to avoid mosquito bites (see Chapter 2, Protection against Mosquitoes, Ticks, and Other Insects and Arthropods).

Vaccine

Yellow fever is preventable by a relatively safe, effective vaccine. All yellow fever vaccines currently manufactured are live-attenuated viral vaccines. YF-Vax, the only yellow fever vaccine licensed for use in the United States, is manufactured by Sanofi Pasteur. Studies comparing the reactogenicity and immunogenicity of various yellow fever vaccines, including those manufactured outside the United States, suggest that there is no significant difference in the reactogenicity or immune response generated by the various vaccines. Thus, people who receive yellow fever vaccines in other countries should be considered protected against yellow fever.

Indications for Use

Yellow fever vaccine is recommended for people aged ≥9 months who are traveling to or living in areas at risk for VFV transmission in South America and Africa. In addition, some countries require proof of yellow fever vaccination for entry. See the Yellow Fever and Malaria Information, by Country section at the end of this chapter for more detailed information on the requirements and recommendations for yellow fever vaccination for specific countries.

Because of the risk of serious adverse events that can occur after yellow fever vaccination, clinicians should only vaccinate people who 1) are at risk of exposure to YFV or 2) require proof of vaccination to enter a country. To further minimize the risk of serious adverse events, clinicians should carefully observe the contraindications and consider the precautions to vaccination before administering yellow fever vaccine (Table 3-23). For additional information, refer to the yellow fever vaccine recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP) at www.cdc.gov/vaccines/pubs/ACIP-list.htm.

Vaccine Administration

For all eligible people, a single injection of 0.5 mL of reconstituted vaccine should be administered subcutaneously. The International Health Regulations (IHR) published by the World Health Organization (WHO) require revaccination at 10-year intervals.

Vaccine Safety and Adverse Reactions
Common adverse reactions

Reactions to yellow fever vaccine are generally mild; 10%–30% of vaccinees report mild systemic adverse events. Reported events typically include low-grade fever, headache, and myalgias that begin within days after vaccination and last 5–10 days. Approximately 1% of vaccinees temporarily curtail their regular activities because of these reactions.

Severe adverse reactions

Hypersensitivity

Immediate hypersensitivity reactions, characterized by rash, urticaria, bronchospasm, or a combination of these, are uncommon. Anaphylaxis after yellow fever vaccine is reported to occur at a rate of 1.8 cases per 100,000 doses administered.

Yellow fever vaccine–associated neurologic disease (YEL-AND)

YEL-AND represents a conglomerate of different clinical syndromes, including meningoencephalitis, Guillain-Barré syndrome, acute disseminated encephalomyelitis, bulbar palsy, and Bell palsy. Historically, YEL-AND was seen primarily among infants as encephalitis, but more recent reports have been among people of all ages.

The onset of illness for documented cases is 3–28 days after vaccination, and almost all cases were in first-time vaccine recipients. YEL-AND is rarely fatal. The incidence of YEL-AND in the United States is 0.8 per 100,000 doses administered. The rate is higher in people aged ≥60 years, with a rate of 1.6 per 100,000 doses in people aged 60–69 and 2.3 per 100,000 doses in people aged ≥70 years.

Yellow fever vaccine–associated viscerotropic disease (YEL-AVD)

YEL-AVD is a severe illness similar to wild-type disease, with vaccine virus proliferating in multiple organs and often leading to multisystem organ failure and death. Since the initial cases of YEL-AVD were published in 2001, more than 50 confirmed and suspected cases have been reported throughout the world.

YEL-AVD appears to occur after the first dose of yellow fever vaccine, rather than with booster doses. The onset of illness for YEL-AVD cases averaged 3 days (range, 1–8 days) after vaccination. The case-fatality ratio for reported YEL-AVD cases is 65%. The incidence of YEL-AVD in the United States is 0.4 cases per 100,000 doses of vaccine administered. The rate is higher for people aged ≥60 years, with a rate of 1.0 per 100,000 doses in people aged 60–69 years and 2.3 per 100,000 doses in people aged ≥70 years.

Contraindications
Infants younger than 6 months

Yellow fever vaccine is contraindicated for infants aged <6 months. This contraindication was instituted in the late 1960s in response to a high rate of YEL-AND documented in vaccinated young infants (50–400 per 100,000). The mechanism of increased neurovirulence in infants is unknown but may be due to the immaturity of the blood-brain barrier, higher or more prolonged viremia, or immune system immaturity.

Hypersensitivity

Yellow fever vaccine is contraindicated for people with a history of hypersensitivity to any of the vaccine components, including eggs, egg products, chicken proteins, or gelatin. The stopper used in vials of vaccine also contains dry latex rubber, which may cause an allergic reaction.

If vaccination of a person with a questionable history of hypersensitivity to one of the vaccine components is considered essential because of a high risk for acquiring yellow fever, skin testing, as described in the vaccine package insert, should be performed under close medical supervision. If a person has a positive skin test to the vaccine or has a severe egg sensitivity and the vaccination is recommended, desensitization, as described in the package insert, can be performed under direct supervision of a physician experienced in the management of anaphylaxis.

Altered immune status

Thymus disorder

Yellow fever vaccine is contraindicated for people with a thymus disorder that is associated with abnormal immune cell function, such as thymoma or myasthenia gravis. If travel to a yellow fever–endemic area cannot be avoided in a person with a thymus disorder that is associated with abnormal immune cell function, a medical waiver should be provided and counseling on protective measures against mosquito bites should be emphasized. Because there is no evidence of immune dysfunction or increased risk of yellow fever vaccine–associated serious adverse events in people who have undergone incidental surgical removal of their thymus or have had indirect radiation therapy in the distant past, these people can be given yellow fever vaccine if recommended or required.

HIV infection

Yellow fever vaccine is contraindicated for people with AIDS or other clinical manifestations of HIV, including people with CD4 T-lymphocyte values <200/mm3 or <15% of total lymphocytes for children less than <6 years. This recommendation is based on a theoretical increased risk of encephalitis in this population (see HIV infection under the following section, Precautions).

If travel to a yellow fever–endemic area cannot be avoided in a person with severe immune suppression based on CD4 counts (<200/mm3 or <15% total for children less than <6 years) or symptomatic HIV, a medical waiver should be provided, and counseling on protective measures against mosquito bites should be emphasized. See the following section, Precautions, for other HIV-infected people not meeting the above criteria.

Immunodeficiencies (other than thymus disorder or HIV infection)

Yellow fever vaccine is contraindicated for people with primary immunodeficiencies, malignant neoplasms, and transplantation. While there are no data on the use of yellow fever vaccine in these people, they presumably are at increased risk for yellow fever vaccine–associated serious adverse events (see the section in Chapter 8, Immunocompromised Travelers).

If someone with an immunodeficiency cannot avoid travel to a yellow fever–endemic area, a medical waiver should be provided, and counseling on protective measures against mosquito bites should be emphasized.

Immunosuppressive and immunomodulatory therapies

Yellow fever vaccine is contraindicated for people whose immunologic response is either suppressed or modulated by current or recent radiation therapies or drugs. Drugs with known immunosuppressive or immunomodulatory properties include, but are not limited to, high-dose systemic corticosteroids, alkylating drugs, antimetabolites, tumor necrosis factor α inhibitors (such as etanercept), interleukin-1 blocking agents (such as anakinra), or other monoclonal antibodies targeting immune cells (such as rituximab or alemtuzumab). There are no specific data on the use of yellow fever vaccine in people receiving these therapies. However, these people are presumed to be at increased risk for yellow fever vaccine–associated serious adverse events, and the use of live attenuated vaccines is contraindicated in the package insert for most of these therapies (see the section in Chapter 8, Immunocompromised Travelers).

Live viral vaccines should be deferred in people who have discontinued these therapies until immune function has improved. If travel to a yellow fever–endemic area cannot be avoided for someone receiving immunosuppressive or immunomodulatory therapies, a medical waiver should be provided and counseling on protective measures against mosquito bites should be emphasized.

Family members of people with an altered immune status who themselves have no contraindications can receive yellow fever vaccine.

Precautions
Infants aged 6–8 months

Age 6–8 months is a precaution for yellow fever vaccination. Two cases of YEL-AND have been reported among infants aged 6–8 months. In infants <6 months of age, the rates of YEL-AND are significantly elevated (50–400 per 100,000). By 9 months of age, risk for YEL-AND is believed to be substantially lower. ACIP generally recommends that, whenever possible, travel to yellow fever-endemic countries should be postponed or avoided for children aged 6–8 months. If travel is unavoidable, the decision of whether to vaccinate these infants needs to balance the risks of YFV exposure with the risk for adverse events after vaccination.

Adults 60 years of age or older

Age ≥60 years is a precaution for yellow fever vaccination, particularly if this is the first dose of the yellow fever vaccine given. A recent analysis of adverse events passively reported to VAERS from 2000 through 2006 indicates that people aged ≥60 years are at increased risk for any serious adverse event after vaccination, compared with younger people. The rate of serious adverse events in people aged ≥60 years was 8.3 per 100,000 doses distributed, compared with 4.7 per 100,000 for all vaccine recipients. The risk of YEL-AND and YEL-AVD is also increased in this age group, at 1.8 and 1.4 per 100,000 doses, respectively, compared with 0.8 and 0.4 per 100,000 for all vaccine recipients. Given that YEL-AND and YEL-AVD are seen almost exclusively in primary vaccine recipients, more caution should be exercised with older travelers who may be receiving yellow fever vaccine for the first time. If travel is unavoidable, the decision to vaccinate travelers aged ≥60 years needs to weigh the risks and benefits of the vaccination in the context of their destination-specific risk for exposure to YFV.

HIV infection

Asymptomatic HIV infection with CD4 T-lymphocyte values 200–499/mm3 or 15%–24% of total lymphocytes for children aged <6 years is a precaution for yellow fever vaccination (see also the HIV infection in the Contraindications section above). Large prospective, randomized trials have not been performed to adequately address the safety and efficacy of yellow fever vaccine among this group. Several retrospective and prospective studies including approximately 450 people infected with HIV have reported no serious adverse events among patients considered moderately immunosuppressed based on their CD4 counts. However, HIV infection has been associated with a reduced immunologic response to a number of inactivated and live attenuated vaccines, including yellow fever vaccine. The mechanisms for the diminished immune response in HIV-infected people are uncertain but appear to be correlated with HIV RNA levels and CD4 T-cell counts.

Because vaccinating asymptomatic HIV-infected people might be less effective than vaccinating people not infected with HIV, their neutralizing antibody response to vaccination should be measured before travel. Contact the appropriate state health department or the CDC Arboviral Diseases Branch (970-221-6400) to further discuss serologic testing.

If an asymptomatic HIV-infected person with moderate immune suppression (CD4 T-lymphocyte values 200–499/mm3 or 15%–24% of total lymphocytes for children aged <6 years) is traveling to a yellow fever–endemic area, vaccination may be considered. Vaccinated people should be monitored closely after vaccination for evidence of adverse events, and the state health department or CDC should be notified if an adverse event occurs.

If international travel requirements—not risk of yellow fever—are the only reason to vaccinate an HIV-infected person, the person should be excused from immunization and issued a medical waiver to fulfill health regulations. If an asymptomatic HIV-infected person has no evidence of immune suppression based on CD4 counts (CD4 T-lymphocyte values ≥500/mm3 or ≥25% of total lymphocytes for children aged <6 years), yellow fever vaccine can be administered if recommended.

Pregnancy

Pregnancy is a precaution for yellow fever vaccine administration. The safety of yellow fever vaccination during pregnancy has not been studied in a large prospective trial. However, a recent study of women who were vaccinated with yellow fever vaccine early in their pregnancies found no major malformations in their infants. A slight increased risk was noted for minor, mostly skin, malformations in infants. A higher rate of spontaneous abortions in pregnant women receiving the vaccine was reported but not substantiated. The proportion of women vaccinated during pregnancy who develop yellow fever IgG-specific antibodies is variable depending on the study (39% or 98%) and may be correlated with the trimester in which they received the vaccine. Because pregnancy may affect immunologic function, serologic testing can be considered to document a protective immune response to the vaccine.

If travel is unavoidable and the vaccination risks are felt to outweigh the risks of YFV exposure, pregnant women should be excused from immunization and issued a medical waiver to fulfill health regulations. Pregnant women who must travel to areas where YFV exposure is likely should be vaccinated. Although there are no specific data, ACIP recommends that a woman wait 4 weeks after receiving the yellow fever vaccine before conceiving.

Breastfeeding

Breastfeeding is a precaution for yellow fever vaccine administration. Two YEL-AND cases have been reported in exclusively breastfed infants whose mothers were vaccinated with yellow fever vaccine. Both infants were aged <1 month at the time of exposure. Further research is needed to document the risk of potential vaccine exposure through breastfeeding. Until more information is available, yellow fever vaccine should be avoided in breastfeeding women. However, when travel of nursing mothers to a yellow fever–endemic area cannot be avoided or postponed, these women should be vaccinated.

Other Considerations

Chronic medical conditions that may be associated with varying degrees of immune deficit include, but are not limited to, chronic renal disease, chronic liver disease (including hepatitis C), and diabetes mellitus. Because no information is available regarding possible increased adverse events or decreased vaccine efficacy after administration of yellow fever vaccine to patients with these diseases, caution should be used if considering vaccination of such patients. Factors to consider in assessing patients' general level of immune competence include disease severity, duration, clinical stability, complications, and comorbidities.

Simultaneous Administration of Other Vaccines and Drugs

Determination of whether to administer yellow fever vaccine and other immunobiologics simultaneously (administration on the same day but at a different injection site) should be made on the basis of convenience to the traveler in completing the desired vaccinations before travel and on information regarding potential immune interference. No evidence exists that inactivated vaccines interfere with the immune response to yellow fever vaccine. Therefore, inactivated vaccines can be administered either simultaneously or at any time before or after yellow fever vaccination. ACIP recommends that yellow fever vaccine be given at the same time as other live-virus vaccines. Otherwise, the clinician should wait 30 days between vaccinations, as the immune response to one live-virus vaccine might be impaired if administered within 30 days of another live-virus vaccine. Because of the different routes of administration, oral Ty21a typhoid vaccine can be administered simultaneously or at any interval before or after yellow fever vaccine.

Table 3-23. Contraindications and precautions to yellow fever vaccine administration

CONTRAINDICATIONS PRECAUTIONS
  • Allergy to vaccine component
  • Age <6 months
  • Symptomatic HIV infection or CD4 T-lymphocytes <200/mm3 (or <15% of total in children aged <6 years)1
  • Thymus disorder associated with abnormal immune-cell function
  • Primary immunodeficiencies
  • Malignant neoplasms
  • Transplantation
  • Immunosuppressive and immunomodulatory therapies
  • Age 6–8 months
  • Age ≥60 years
  • Asymptomatic HIV infection and CD4 T-lymphocytes 200–499/mm3 (or 15%–24% of total in children aged <6 years)1
  • Pregnancy
  • Breastfeeding

1Symptoms of HIV are classified in 1) Adults and Adolescents, Table 1. CDC. 1993 Revised classification system for HIV infection and expanded surveillance case definition for AIDS among adolescents and adults.MMWR Recomm Rep 1992 Dec 18: 41(RR-17). Available from: www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00018871.htm and 2) Panel on Antiretroviral Therapy and Medical Management of HIV-Infected Children. Guidelines for the use of antiretroviral agents in pediatric HIV infection. 2010. Available from: http://aidsinfo.nih.gov/ContentFiles/PediatricGuidelines.pdf Adobe PDF fileExternal Web Site Icon (PDF). p. 20-2.

The IHRs allow countries to require proof of yellow fever vaccination as a condition of entry for travelers arriving from certain countries, even if only in transit, to prevent importation and indigenous transmission of YFV. Some countries require evidence of vaccination from all entering travelers, which includes direct travel from the United States (Table 3-24). Travelers who arrive in a country with a yellow fever vaccination entry requirement without proof of yellow fever vaccination may be quarantined for up to 6 days, refused entry, or vaccinated on site. A traveler who has a specific contraindication to yellow fever vaccine and who cannot avoid travel to a country requiring vaccination should request a waiver from a physician before embarking on travel (see the Medical Waivers section).

Authorization to Provide Vaccinations and to Validate the ICVP

Under the revised IHR (2005), effective December 15, 2007, all state parties (countries) are required to issue a new ICVP. This is intended to replace the former International Certificate of Vaccination against Yellow Fever (ICV). People who received a yellow fever vaccination after December 15, 2007, must provide proof of vaccination on the new ICVP. If the person received the vaccine before December 15, 2007, the original ICV card is still valid, provided that the vaccination was given <10 years previously. Vaccinees should receive a completed ICVP (Figure 3-01), validated (stamped and signed) with the center's stamp where the vaccine was given (see below). An ICVP must be complete in every detail; if incomplete or inaccurate, it is not valid. Failure to secure validations can cause a traveler to be quarantined, denied entry, or possibly revaccinated at the point of entry to a country. Revaccination at the point of entry is not a recommended option for the traveler.

Clinics may purchase ICVPs, CDC 731 (formerly PHS 731), from the US Government Printing Office (http://bookstore.gpo.gov/External Web Site Icon, 866-512-1800). The stock number is 017-001-00567-3 for 25 copies and 017-001-00566-5 for 100 copies. This certificate of vaccination is valid for a period of 10 years, beginning 10 days after the date of vaccination. When a booster dose of the vaccine is given within this 10-year period, the certificate is considered valid from the date of revaccination.

People Authorized to Sign the ICVP and Designated Yellow Fever Vaccination Centers

The ICVP must be signed by a medical provider, who may be a licensed physician or a health care worker designated by the physician, supervising the administration of the vaccine (Figure 3-01). A signature stamp is not acceptable. Yellow fever vaccination must be given at a certified center in possession of an official "uniform stamp," which can be used to validate the ICVP.

State health departments are responsible for designating nonfederal yellow fever vaccination centers and issuing uniform stamps to clinicians. Information about the location and hours of yellow fever vaccination centers may be obtained by visiting CDC's website at wwwnc.cdc.gov/travel/yellow-fever-vaccination-clinics-search.aspx.

Medical Waivers (Exemptions)

Some countries do not require an ICVP for infants younger than a certain age (<6 months, <9 months, or <1 year of age, depending on the country). Age requirements for vaccination for individual countries can be found in the Yellow Fever and Malaria Information, by Country section in this chapter. For medical contraindications, a physician who has decided to issue a waiver should fill out and sign the Medical Contraindications to Vaccination section of the ICVP (Figure 3-02). The clinician should also do the following:

  • Give the traveler a signed and dated exemption letter on the physician's letterhead stationery, clearly stating the contraindications to vaccination and bearing the stamp used by the yellow fever vaccination centers to validate the ICVP.
  • Inform the traveler of any increased risk for yellow fever infection associated with nonvaccination and how to minimize this risk by avoiding mosquito bites.

Reasons other than medical contraindications are not acceptable for exemption from vaccination. The traveler should be advised that issuance of a waiver does not guarantee its acceptance by the destination country. On arrival at the destination, the traveler may be faced with quarantine, refusal of entry, or vaccination on site. To improve the likelihood that the waiver will be accepted at the destination country, clinicians can suggest that the traveler take the following additional measures before beginning travel:

  • Obtain specific and authoritative advice from the embassy or consulate of the destination country or countries.
  • Request documentation of requirements for waivers from embassies or consulates and retain these along with the completed Medical Contraindication to Vaccination section of the ICVP.

 

Table 3-24. Countries that require proof of yellow fever vaccination from all arriving travelers1

Angola
Benin
Burkina Faso
Burundi
Cameroon
Central African Republic
Congo, Repubic of the
Côte d'Ivoire
Democratic Republic of Congo
French Guiana
Gabon
Ghana
Guinea-Bissau
Liberia
Mali
Niger
Rwanda
São Tomé and Príncipe
Sierra Leone
Togo

1 Country requirements for yellow fever vaccination are subject to change at any time; therefore, CDC encourages travelers to check with the destination country's embassy or consulate before departure.

Figure 3-01. Example International Certificate of Vaccination or Prophylaxis (ICVP)

Example International Certificate of Vaccination or Prophylaxis (ICVP)

View Larger Figure

(1) Name should appear exactly as on the patient's passport.
(2, 5, 7) All dates should be entered with the day in numerals, followed by the month in letters, then the year. For example: in the above example, the patient's date of birth is 22 March 1960.
(3) This space is for the patient's signature.
(4) For a yellow fever vaccination, 'Yellow Fever' should be written in both spaces. Should the ICVP be used for a required vaccination or prophylaxis against another disease or condition (following an amendment to the International Health Regulations or by recommendation of WHO), that disease or condition should be written in this space. Other vaccinations may be listed on the other side.
(5) The date on which the vaccination is given should be entered as shown above.
(6) A handwritten signature of the clinician—either the stamp holder or another health care provider authorized by the stamp holder—administering or supervising the administration of the vaccine (or prophylaxis) should appear in this box. A signature stamp is not acceptable.
(7) The certificate of yellow fever vaccination is valid for 10 years, beginning 10 days after the date of primary vaccination. The ending date for a valid vaccination recorded on the ICVP is 1 calendar day prior to the calendar day on which the vaccine became valid. For example, a vaccination given on 15 June 2012 will be valid on 25 June 2012 and will expire on 24 June 2022. In the case of revaccination, the certificate of yellow fever vaccination is valid immediately if documentation exists on an ICVP demonstrating that the previous yellow fever vaccination was given within the last 10 years.
(8) The Uniform Stamp of the vaccinating center should appear in this box.

Figure 3-02. Medical Contraindication to Vaccination section of the International Certificate of Vaccination or Prophylaxis (ICVP)

Medical Contraindication to Vaccination section of the International Certificate of  Vaccination or

View Larger Figure

Country entry requirements for proof of yellow fever vaccination under the IHRs are different from CDC's recommendations. Yellow fever vaccine entry requirements are established by countries to prevent the importation and transmission of YFV and are allowed under the IHRs. Travelers must comply with these to enter the country, unless they have been issued a medical waiver. Certain countries require vaccination from travelers arriving from all countries, while some countries require vaccination only for travelers coming from "a country with risk of yellow fever transmission" (see the Yellow Fever and Malaria Information, by Country section in this chapter). WHO defines those areas "with risk of yellow fever transmission" as countries or areas where yellow fever has been reported currently or in the past, plus where vectors and animal reservoirs exist. Country requirements are subject to change at any time; therefore, CDC encourages travelers to check with the appropriate embassy or consulate before departure.

The information in the section on yellow fever vaccine recommendations is advice given by CDC to prevent yellow fever infections among travelers. Recommendations are subject to change at any time if disease conditions change; therefore, CDC encourages travelers to check the destination pages for up-to-date vaccine information and to check for relevant travel notices on the CDC website before departure (www.cdc.gov/travel).

CDC, WHO, and other yellow fever experts recently completed a comprehensive review of available data and revised the criteria and global maps designating the risk of YFV transmission. The new criteria establish 4 categories of risk for YFV transmission that apply to all geographic areas: endemic, transitional, low potential for exposure, and no risk.

Yellow fever vaccination is recommended for travel to endemic and transitional areas. Although vaccination is generally not recommended for travel to areas with low potential for exposure, it might be considered for a small subset of travelers whose itinerary could place them at increased risk for exposure to YFV (such as prolonged travel, heavy exposure to mosquitoes, or inability to avoid mosquito bites).

Based on the revised criteria for yellow fever risk classification, the current maps (Maps 3-18 and 3-19) and country-specific information (see the Yellow Fever and Malaria Information, by Country later in this chapter) designate 3 levels of yellow fever vaccine recommendations: recommended, generally not recommended, and not recommended. Note: The revised yellow fever Maps 3-18 and 3-19 now depict vaccination recommendations rather than yellow fever risk.

Countries that only contain areas with low potential for exposure to YFV (Table 3-22) are not included on the official WHO list of countries with risk of YFV transmission (Table 3-21). Therefore, proof of yellow fever vaccination should not be required if traveling from a country with low potential for exposure to YFV to a country with a vaccination entry requirement (unless that country requires proof of yellow fever vaccination from all arriving travelers; see Table 3-24).

Map 3-18. Yellow fever vaccine recommendations in Africa, 2010

Map 3-18 - Yellow fever vaccine recommendations in Africa, 2010

View Larger Map PDF Version (printable) Adobe PDF file

*Yellow fever (YF) vaccination is generally not recommended in areas where there is low potential for YF virus exposure. However, vaccination might be considered for a small subset of travelers to these areas who are at increased risk for exposure to YF virus because of prolonged travel, heavy exposure to mosquitoes, or inability to avoid mosquito bites. Consideration for vaccination of any traveler must take into account the traveler's risk of being infected with YF virus, country entry requirements, and individual risk factors for serious vaccine-associated adverse events (e.g., age, immune status).

Map 3-19. Yellow fever vaccine recommendations in the Americas, 2010

 

*Update: For the most current yellow fever vaccine recommendations for Brazil, see CDC Yellow Fever Recommendations for Brazil.

Map 3-19 Yellow fever vaccine recommendations in the Americas, 2010

PDF Version (printable) Adobe PDF file

*Yellow fever (YF) vaccination is generally not recommended in areas where there is low potential for YF virus exposure. However, vaccination might be considered for a small subset of travelers to these areas who are at increased risk for exposure to YF virus because of prolonged travel, heavy exposure to mosquitoes, or inability to avoid mosquito bites. Consideration for vaccination of any traveler must take into account the traveler's risk of being infected with YF virus, country entry requirements, and individual risk factors for serious vaccine-associated adverse events (e.g., age, immune status).

Because military requirements may exceed those indicated in this publication, any person who plans to travel on military orders (civilians and military personnel) should contact the nearest military medical facility to determine the requirements for his or her trip.

  1. Barwick R. History of thymoma and yellow fever vaccination. Lancet. 2004 Sep 11–17;364(9438):936.
  2. Cavalcanti DP, Salomao MA, Lopez-Camelo J, Pessoto MA. Early exposure to yellow fever vaccine during pregnancy. Trop Med Int Health. 2007 Jul;12(7): 833–7.
  3. CDC. General recommendations on immunization: recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP). MMWR Recomm Rep. 2010.
  4. CDC. Transmission of yellow fever vaccine virus through breast-feeding—Brazil, 2009. MMWR Morb Mortal Wkly Rep. 2010 Feb 12;59(5):130–2.
  5. Fletcher MA, Fabre P, Debois H, Saliou P. Vaccines administered simultaneously: directions for new combination vaccines based on an historical review of the literature. Int J Infect Dis. 2004 Nov;8(6): 328–38.
  6. Hayes EB. Acute viscerotropic disease following vaccination against yellow fever. Trans R Soc Trop Med Hyg. 2007 Oct;101(10):967–71.
  7. Lindsey NP, Schroeder BA, Miller ER, Braun MM, Hinckley AF, Marano N, et al. Adverse event reports following yellow fever vaccination. Vaccine. 2008 Nov 11;26(48):6077–82.
  8. McMahon AW, Eidex RB, Marfin AA, Russell M, Sejvar JJ, Markoff L, et al. Neurologic disease associated with 17D-204 yellow fever vaccination: a report of 15 cases. Vaccine. 2007 Feb 26;25(10):1727–34.
  9. Monath TP, Cetron MS. Prevention of yellow fever in people traveling to the tropics. Clin Infect Dis. 2002 May 15;34(10):1369–78.
  10. Monath TP, Nichols R, Archambault WT, Moore L, Marchesani R, Tian J, et al. Comparative safety and immunogenicity of two yellow fever 17D vaccines (ARILVAX and YF-VAX) in a phase III multicenter, double-blind clinical trial. Am J Trop Med Hyg. 2002 May;66(5):533–41.
  11. Monath TP, Teuwen D, Cetron MS. Yellow fever vaccine. In: Plotkin S, Orenstein WA, Offit PA, editors. Vaccines. 5th ed. Philadelphia: WB Saunders; 2008. p. 959–1055.
  12. Nasidi A, Monath TP, Vandenberg J, Tomori O, Calisher CH, Hurtgen X, et al. Yellow fever vaccination and pregnancy: a four-year prospective study. Trans R Soc Trop Med Hyg. 1993 May–Jun;87(3):337–9.
  13. Nishioka SD, Nunes-Araujo FRF, Pires WP, Silva FA, Costa HL. Yellow fever vaccination during pregnancy and spontaneous abortion: a case-control study. Trop Med Int Health. 1998 Jan;3(1):29–33.
  14. Pan American Health Organization. Yellow fever in Paraguay: mobilization continues. 2008 [cited 2010 Oct 19]. Available from: http://www.paho.org/English/ad/dpc/cd/eid-eer-2008-02-25.htmExternal Web Site Icon.
  15. Staples JE, Gershman M, Fischer M. Yellow fever vaccine: recommendations of the Advisory Committee on Immunization Practices (ACIP). MMWR Recomm Rep. 2010 Jul 30;59(RR-7):1–27.
  16. Suzano CES, Amaral E, Sato HK, Papaiordanou PM, Fever CGY. The effects of yellow fever immunization (17DD) inadvertently used in early pregnancy during a mass campaign in Brazil. Vaccine. 2006 Feb 27;24(9):1421–6.
  17. Tomori O. Yellow fever: the recurring plague. Crit Rev Clin Lab Sci. 2004;41(4):391–427.
  18. Whittembury A, Ramirez G, Hernandez H, Ropero AM, Waterman S, Ticona M, et al. Viscerotropic disease following yellow fever vaccination in Peru. Vaccine. 2009 Oct 9;27(43):5974–81.
  19. World Health Organization. International Health Regulations, 2005. 2008 [cited 2010 Oct 19]. Available from: http://whqlibdoc.who.int/publications/2008/9789241580410_eng.pdf Adobe PDF fileExternal Web Site Icon.
  20. 20 World Health Organization. Yellow fever vaccine. WHO position paper. Wkly Epidemiol Rec. 2003 Oct 3;78(40):349–59.

Monday, August 27, 2012

கல்யாண சமையல்

விதம்விதமான சுவை, மணம், நிறம் கொண்டு... வயிற்றையும் மனதையும் ஒருசேர நிறைவடைய செய்வதில் கல்யாண விருந்துக்கு ஈடு இல்லை. 

 அசோகா

தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 400 கிராம், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி - 10.

செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, அரை மணி நேரம் ஊற வைத்து வேகவிட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சர்க்கரை நனையும் அளவுக்கு தண்ணீர் விட்டு  கொதிக்கவிடவும். கம்பிப் பாகு பதம் வந்ததும் அரைத்த பாசிப்பருப்பு, வறுத்த கோதுமை மாவு இரண்டையும் கலந்து, சர்க்கரைப் பாகில் சேர்த்துக் கிளறவும். கிளறும்போது நெய், கேசரி பவுடர் சேர்க்கவும். அல்வா பதம் போல கெட்டி யானதும், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

போண்டா

தேவையானவை: கடலை மாவு - 250 கிராம், உருளைக்கிழங்கு - 250 கிராம், சிறிய பச்சை மிளகாய் - 2, பெரிய வெங்காயம் - 2, இஞ்சி -  ஒரு சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும். இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

மனோகர பருப்பு தேங்காய்

தேவையானவை: அரிசி மாவு - கால் கிலோ, பாகு வெல்லம் - கால் கிலோ, வறுத்து, அரைத்து, சலித்த உளுத்தம்பருப்பு மாவு - 2 டீஸ்பூன்,  எண்ணெய் - அரை லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: அரிசி மாவில் முறுக்குமாவு பதத்துக்கு தேவையான தண்ணீர் விட்டு, உளுந்தமாவு சேர்த்துப் பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதுதான் மனோகரம். வெல்லத்தை உடைத்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கெட்டிப் பாகாக காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு  வெல்லப்பாகை சிறிது ஊற்றி கையில் திரட்டினால்... உருண்டு  வரும். இதுதான் சரியான பதம்). பாகை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, செய்து வைத்திருக்கும் மனோகரத்தை சிறு துண்டுகளாக உடைத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பருப்பு தேங்காய் கூட்டில் உள்புறம் சிறிது நெய் தடவி மனோகரத்தை நிரப்பவும். பிறகு, கூட்டை அகற்றினால், கூம்பு வடிவில் அழகாக இருக்கும் மனோகர பருப்பு தேங்காய்.

குறிப்பு: பருப்பு தேங்காய் கூட்டினை கலர் பேப்பரால் அலங்கரித்தால் மிகவும் அழகாக இருக்கும். கூட்டின் உள்புறம் நெய் தடவி இருப்பதால் எளிதாக எடுக்க முடியும். உப்பு சேர்க்க வேண்டாம். பெயர்தான் பருப்பு தேங்காய்... ஆனால், தேங்காய் சேர்க்கத் தேவையில்லை.

ரவா கிச்சடி

தேவையானவை: ரவை - 250 கிராம், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப், கேரட் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று,  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை - காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்.

தேங்காய் சாதம்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், நன்கு முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வறுத்து, சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும். கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: முந்திரிக்குப் பதில் வறுத்த வேர்க்கடலையும் சேர்க்கலாம்.

கீரை வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை - இரண்டு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கீரையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே முறையில் காய்களை நறுக்கி சேர்த்தும் வடை தயாரிக்கலாம். இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

பூந்தி தயிர்வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கராபூந்தி - 100 கிராம், தயிர் (புளிக்காதது) - 250 மில்லி, கேரட் துருவல் - 4 டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -  சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து தண்ணீரை வடிகட்டி... பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு அகலமான தட்டில் பரவலாக வைத்து, மேலே கேரட் தூவி, பூந்தி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பிஸிபேளாபாத்

தேவையானவை: அரிசி - 500 கிராம், துவரம்பருப்பு - 400 கிராம், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) - 20, உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உரித்த பச்சைப் பட்டாணி  - ஒரு கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் தேங்காய் -  பாதி அளவு,  தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் பருப்பு சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். கேரட், உருளை, பீன்ஸ், குடமிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி, சின்ன வெங்காயம், பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து, வதக்கிய காய்களுடன் சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... காய்ந்த மிளகாய், கொப்பரைத் தேங்காய் துண்டுகள், தனியா, கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும். வேக வைத்த சாதம் - பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, சாம்பாரை ஊற்றி நன்கு மசிக்கவும். புதினாவை வதக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.

மிக்ஸ்டு சேவை

தேவையானவை: புழுங்கல் அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய அல்லது  துருவிய கேரட்,  பொடியாக நறுக்கிய குடமிளகாய் , தேங்காய் துருவல், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 3, எலுமிச்சம் பழம் - ஒன்று, கடுகு - தேவையான அளவு, பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து களைந்து, மிக்ஸியில் கெட்டியாகவும் நைஸாகவும், தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு, மாவை சிறிது உப்பு சேர்த்துக் கலந்து, கெட்டியாகக் கிளறவும். கிளறிய மாவை கெட்டியாக பிசைந்து உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். சேவை பிழியும் அச்சில் உருண்டைகளைப் போட்டு, சேவையாக பிழிந்து, அதை மூன்று பங்குகளாக பிரிக்கவும். கேரட், பட்டாணி, குடமிளகாய், சிறிதளவு பச்சை மிளகாயை வதக்கி ஒரு பங்கு சேவையுடன் சேர்த்து, கடுகு தாளித்து கலக்கவும். தேங்காய் துருவலில் சிறிதளவு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து தேங்காய் சிவக்கும் வரை வறுத்து மற்றொரு பங்கு சேவையுடன் கலந்து சிறிதளவு வறுத்த முந்திரி சேர்க்கவும். கடுகு, சிறிது பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து மீதமுள்ள சேவையுடன் கலந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். மீதமுள்ள முந்திரியை சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானவை: சேப்பங்கிழங்கு - 500 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேப்பங்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து சரிபாதியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நறுக்கிய சேப்பங்கிழங்கு துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது, சேப்பங்கிழங்குடன் சோள மாவு சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.

வெஜிடபிள் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பீன்ஸ் - 6, குடமிளகாய் (சிறியது) - ஒன்று, உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப், கேரட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். பீன்ஸ், குடமிளகாய், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கி, உப்பு போட்டு, சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன், வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்தால்... வெஜிடபிள் புலாவ் ரெடி!

குறிப்பு: பனீர் பொரித்து சேர்க்கலாம். இதற்கு தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ராய்தா சூப்பர் காம்பி னேஷன்!

கோசுமல்லி

தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் - தலா ஒரு கப், எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடியவிட்டு... கேரட் துருவல், வெள்ளரிக்காய் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு தாளித்து சேர்க்கவும்.

பொங்கல்

தேவையானவை: அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  - 2 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,  நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பையும் அரிசியும் ஒன்று சேர்த்து லேசாக சூடு வரும் வரை வறுத்து, ஒரு பங்கு அரிசிக்கு ஐந்து பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு, சீரகத்தை லேசாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு இஞ்சி, மிளகு - சீரகப் பொடி, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து... கறிவேப்பிலை, வறுத்த முந்திரி சேர்க்கவும். இதை வேகவைத்த சாதத்துடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்பு: தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். சாம்பார், கொத்சுவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையானவை: பீன்ஸ் - 200 கிராம், துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 3,  கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பீன்ஸை தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... அரைத்த பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும். பின்பு பீன்ஸையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் கோஸ், அவரைக்காய், கொத்தவரங்காயிலும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை: வெண்டைக்காய் - 20, அதிக புளிப்பு இல்லாத மோர் - 500 மில்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - ஒரு டீஸ்பூன்,  கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு நீக்கி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலந்து, உப்பு போட்டுக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம் தாளித்து...  மோர் கலவையை சேர்த்து, வதக்கிய வெண்டைக்காய் துண்டுகளையும் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: இதேமுறையில் கத்திரிக்காயிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்

பருப்பு வடை

தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி... காய்ந்த மிளகாய் இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாகவும், சிறிது கொரகொரப்பாகவும் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை

தேவையானவை: காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று, சோள மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 200 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை, கொஞ்சம் பெரிய சைஸ் பூக்களாக நறுக்கி, தண்ணீர் விட்டு சிறிது நேரம் சூடாக்கி, தண்ணீர் வடிக்கவும். சோள மாவு, கடலை மாவு, கேசரி பவுடர், அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காலிஃப்ளவருடன் சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசிறி வைத்த காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:  காலிஃப்ளவரை வேக வைத்து, மசாலா கலவையும் தயார் செய்து வைத்து, சாப்பிடும் சமயம் சூடாகப் பொரித்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

கதம்ப சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், புளி - 100 கிராம், சாம்பார் பொடி - 6 டீஸ்பூன், கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட் - தலா ஒன்று, அவரைக்காய் - 4, பச்சை மிளகாய் - 2 , தேங்காய் துருவல் - ஒரு கப், கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல்  சேர்த்து அரைக்கவும். கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், அவரைக்காய், பச்சை மிளகாயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும். புளிக் கரைசலை அதில் விட்டு... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு கலவை, வேக வைத்த துவரம்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மணத்தக்காளி வற்றல், எண்ணெய், சாம்பார் பொடி - தலா 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் ஆகியவற்றை தாளித்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில், பச்சை காய்களைப் பயன்படுத்தியும் குழம்பு தயாரிக்கலாம்.

சேனை வறுவல்

தேவையானவை: சேனைக்கிழங்கு - 250 கிராம், மஞ்சள்  தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சேனையை தோல் சீவி, வறுவலுக்கு நறுக்கும் விதத்தில் சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாகக் கழுவி தண்ணீர் வடியவிடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்திருக்கும் சேனைத் துண்டுகளைப் பொரித்து எடுத்து,  மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடிவைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 2, பீன்ஸ் - 6, சௌசௌ - பாதி, அவரைக்காய் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பரங்கிக்கீற்று - பாதி அளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல், தயிர் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், சௌசௌ, கேரட், பரங்கிக்கீற்று, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் - பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்து சேர்த்து, தயிர் சேர்த்து, தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: அடைக்கு, இந்த அவியல் தொட்டு சாப்பிட்டால்.. அற்புத சுவையில் இருக்கும்.

பூரி - சன்னா

தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம், கொண்டைக்கடலை - 100 கிராம், தக்காளி, - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு கப், கசகசா - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சிறிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கொண்டைக்கடலையை ஊற வைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். தக்காளி, காய்ந்த மிளகாய், கசகசா, தேங்காய் துருவல், தனியா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: பூரி - சன்னா மிகவும் சுவையான காம்பினேஷன். கோதுமை மாவு பிசைந்த உடனேயே பூரியை பொரித்துவிட வேண்டும். சன்னாவின் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவலாம்.

ஜீரா போளி

தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 500 மில்லி.

செய்முறை: ரவையை தண்ணீர், கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, இதை மீண்டும் பிசைந்து அப்பள வடிவில் இட்டு எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து (கம்பிப் பதம்), பொரித்த போளிகளைப் போட்டு இருபுறமும் சர்க்கரைப் பாகு படும்படி புரட்டி, தனியாக தட்டில் எடுத்து வைக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.

குறிப்பு: இதை சாதாரண ரவையில் செய்ய வேண்டும். ரோஸ்டட் ரவை பயன்படுத்தக் கூடாது. ஒரு வாரம் வரை வைத்தி ருந்து சாப்பிடலாம். கொதிக்கும் பாலில் இந்த போளியை நனைத்து எடுத்து, ஊறிய உடன் சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.

பால் பாயசம்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி அளவு, பால் - 2 லிட்டர், சர்க்கரை - 400 கிராம், வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை: பாசுமதி அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும் (குக்கரை மூடக் கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிவிட வேண்டும்). பால் கொதித்து, அரிசி வெந்து,  பால் பாதியளவுக்கு குறுகி  வரும்போது சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: பாதாம்பருப்பை நான்கு பொடித்து சேர்க்கலாம்.

அக்காரவடிசல்

தேவையானவை: அரிசி - அரை கிலோ, வெல்லம் - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், கல்கண்டு - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  உலர் திராட்சை, வறுத்த முந்திரிப்பருப்பு - தலா 10, நெய் - 100 மில்லி,  குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை: அரிசியுடன் ஒரு லிட்டர் பால், அரை லிட்டர் தண்ணீர் கலந்து குக்கரில் வைத்து குழைவாக வேகவிடவும். வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் வெல்லப்பாகு, சர்க்கரை, கல்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நெய்யில் திராட்சையை வறுத்து சேர்த்து, வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.

பழப்பச்சடி

தேவையானவை: தக்காளிப்பழம் - 4, திராட்சைப் பழம் - 100 கிராம், சர்க்கரை - 2 கப், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சர்க்கரையை நனையும்வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வதக்கியத் தக்காளியைப் போட்டு, பிறகு திராட்சைப் பழத்தையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.

 வெண்டைக்காய் ரோஸ்ட்

தேவையானவை: வெண்டைக்காய் - 250 கிராம், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், சோள மாவு - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு,

செய்முறை: வெண்டைக்காயை கழுவி, உலரவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, வெண்டைக்காயுடன் நன்றாக கலக்கவும். பிறகு, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பைனாப்பிள் ரசம்

தேவையானவை: பைனாப்பிள் - 4 துண்டுகள், புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு, தண்ணீர் - 250 மில்லி, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த பருப்பு -  ஒரு கப், கடுகு - கால் டீஸ்பூன்,  கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை  தண்ணீர் விட்டுக் கரைத்து, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, மிளகு - சீரகத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

ஃப்ரூட் தயிர்சாதம்

தேவையானவை: அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 100 கிராம், கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை - தலா 10, மாதுளம் முத்துக்கள் - ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பால் - 300 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்கு மசித்து பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து... திராட்சை, மாதுளம் முத்துக்கள், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த  முந்திரி தூவவும்.

குறிப்பு: மாங்காய், வெள்ளரிக்காய், கேரட் சேர்த்தும் தயாரிக்கலாம்.

முந்திரி கேக்

தேவையானவை: முந்திரிப்பருப்பு - 40, சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: முந்திரிப்பருப்பை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில், நனையும் வரை தண்ணீர் விட்டு கம்பிப் பதமாக பாகு காய்ச்சி, முந்திரிப் பொடியை சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கெட்டியாக வரும்போது ஒரு பிளேட்டில் நெய் தடவி, கிளறியதை கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: குழந்தைகளுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகள் போடலாம். பாதாம் பருப்பிலும் இதேமுறையில் கேக் தயாரிக்கலாம்.