Saturday, August 4, 2012

பான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

ன்லைன் மூலமும் விண்ணப்பித்து பான்கார்டை பெறலாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லது https://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யும்போது, ஏதாவது விவரங்கள் தவறாக இடம் பெற்றுவிட்டால் அதனைச் சரிசெய்து மீண்டும் 'சப்மிட்' செய்ய வழியிருக்கிறது. விண்ணப்பத்தை 'சப்மிட்' செய்தபிறகு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் 'அக்னாலெட்ஜ்மென்ட்' பகுதி தோன்றும், அதில் பத்து இலக்க பான் எண் இடம் பெற்றிருக்கும். மேலும், அதில் கலர் புகைப்படம் ஒட்டுவதற்கு 3.5 செ.மீ - க்கு 2.5 செ.மீ இடம் விடப்பட்டிருக்கும். இதனை பிரின்ட் அவுட் எடுத்து, போட்டோவை ஒட்டி, கையப்பமிட்டு புகைப்படத்துடன் கூடிய சான்று (proof of identity) மற்றும் முகவரி ஆதாரம், பான் கார்ட் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி அல்லது செக் ஆகியவற்றை National Securities Depository Limited, Trade World, A Wing, 4th Floor, Kamala Mills compound, Senapati Marg, Lower parel, Mumbai-400 013. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தும்போது கூடுதலாக சேவைக் கட்டணம் இருக்கிறது. 15 நாட்களுக்குள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட் வீட்டுக்கு வரும். இம்முறையில் விண்ணப்பிக்கும்போது விவரங்களை மிகவும் கவனமாகப் பூர்த்திசெய்வது மிக அவசியம். இல்லை என்றால் கார்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.