Tuesday, April 30, 2013

Marriage – The facts you need to know - 35

Marriage – The facts you need to know - 35

 

·         You need to know to look at each other with the same passion and interest as you did ten years ago. The looks of "Did you pay the mortgage?" and "I'm stumbling over your shoes" do nothing for romance.

·         You need to know therapists recommend talking to your spouse about being attracted to another person before you do something stupid. It lessens the likelihood of having to talk to a lawyer later.

·         You need to know if you're drinking without your husband around, any idiot could look good after several hours.

·         You need to know the more you know about each other's past, the better able you'll be to withstand the present strains.

·         You need to know you can always walk away from an affair before it gets started. Even if it means going home to a stressed-out mom of two babies.

·         You need to know women tend to stray because of their need to connect to a man emotionally. Men who don't understand this wind up watching ESPN alone. Real alone.

·         You need to know that having one affair will tend to lead to another.

·         You need to know that an affair means your spouse can never trust you again. She may forgive you. She may go to counseling. She can pray for hours on end. But trust has been shattered.

·         You need to know a husband doing housework is a turn-on for women.

·         You need to know who's going to push the vacuum cleaner and who's going to take out the garbage. You better believe the issue will come up.

·         You need to know whoever works at home is expected to keep the place clean. Even if they are the primary breadwinner.

·         You need to know that even when a wife goes to work and her husband tends the house, she still does most of the housework. It's not a plot. It's reality.

·         You need to know that a successful division of housework depends on what your friends are doing. Husbands will copy other husbands.

·         You need to know a woman can see dirt two or three days before a man does.

·         You need to know that for some weird reason, women don't equate washing the car or changing light bulbs with folding the laundry or scrubbing the toilets.

·         You need to know research indicates 59% of men lose their hearing when a woman asks them to clean the house.

·         You need to know the more you tell him he didn't do housework right the more he'll let you do it by yourself.

·         You need to know there's no such thing as men's chores and women's chores. That kind of thinking puts men on the couch for the night.

·         You need to know there's a difference between obsession and housework. If you're obsessed with keeping everything spotless, don't expect him to share your enthusiasm for Windexing.

·         You need to know a man's inclination is to put things off, while a woman's is to strike before the sun's up. That's why she's vacuuming while he's groggily looking for the coffeemaker.

 

இணைய தள காதல் - முதல்நாள் திருமணம்; மறுநாள்,"டைவர்ஸ்'

இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமணம் செய்தனர். அதற்கு, அடுத்த நாளிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, தகராறாக மாறியது. பொய்யான தகவல்களை கூறி, சங்கர், தன்னை ஏமாற்றி விட்டதாக, சீமா புகார் கூறினார்.

பதிலுக்கு, சீமா, தன்னை ஏமாற்றி விட்டதாக, சங்கரும் புகார் கூறினார். ஆத்திரமடைந்த, சீமாவின் பெற்றோர், கற்பழிப்பு புகார் கொடுக்கப் போவதாக, சங்கரிடம் எச்சரிக்கை விடுத்தனர். பதிலுக்கு, சங்கரும், மிரட்டினார்.

தகராறு முற்றியதை தொடர்ந்து, இரு தரப்புமே, போலீசில் புகார் தெரிவித்தனர். பின், போலீஸ் ஸ்டேஷனிலேயே, இரு தரப்பினரும், அமர்ந்து பேசி, சுமுக முடிவுக்கு வந்தனர். இதன்படி, இரு தரப்பினரும், புகாரை வாபஸ் பெற்றனர். சீமாவும், சங்கரும்,"ஒருவரை ஒருவர், சரியாக புரிந்து கொள்ளாமல், அவசர கோலத்தில், திருமணம் செய்து விட்டோம். எங்களின் திருமணம் செல்லாது. ஒருவரை ஒருவர், பிரிகிறோம்' என, கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, பிரிந்து சென்றனர்.திருமணம் முடிந்த அடுத்த நாளே, அவர்களின், திருமண பந்தமும் முடிவுக்கு வந்தது.

(தினமலர், 30/04/2013)

Saturday, April 27, 2013

டைம்ஷேர் - உஷாராக இருங்கள் சுற்றுலா விரும்பிகளே!



ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

''ஹலோ, மிஸ்டர் ராமச்சந்திரன் வீடுங்களா?''

''ஆமா, நீங்க...?''

''............. கம்பெனில இருந்து பேசுறோம். சார்கிட்ட பேசணும்.''

''சார் வெளியில் போயிருக்காரு! என்ன விஷயம் சொல்லுங்க?''

''உங்க நம்பருக்கு ஒரு கிஃப்ட் விழுந்துருக்கு?''

''அப்படியா? நீங்க கிஃப்டை வீட்ல தந்துடுங்க!''

''இல்ல மேடம், நீங்கதான் வந்து வாங்கிக்கணும். அதுவும் கணவன், மனைவி சேர்ந்து வந்துதான் வாங்கணும்!''

''சரி, அவர் வந்தவுடனே இதைப் பத்தி அவர்கிட்ட சொல்றேன்.''

''கட்டாயம் நீங்க ரெண்டுபேரும் எங்க ஆபீஸ் அட்ரஸுக்கு வந்துடுங்க மேடம்!''

இதுமாதிரியான போன்கால் உங்களுக்கு வந்திருக்கலாம். இல்லை, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வந்திருக்கலாம். இப்படி வரும் போன்கால்களை சீரியஸாக எடுக்காமல் விட்டிருந்தால் நீங்கள் பிழைத்தீர்கள். ஏதோ கிஃப்டாமே! என்ன கிஃப்ட் என்று போய் பார்த்தால்தான் என்ன என்று கிளம்பினால்,  நீங்களே வலியப்போய் சிக்கலில் மாட்டிய கதையாக ஆகிவிடும். அப்படி என்ன செய்து விடுவார்கள் என்கிறீர்களா?

''மொத்தமாக ஒரு தொகையினை எங்க ரிசார்ட்ல கட்டிடுங்க. அடுத்த 25 வருஷத்துக்கு நீங்க எப்போ வேணுமின்னாலும் எந்த வாடகையும் இல்லாம உங்கள் குடும்பத்தோட வந்து தங்கலாம். இதுக்குப் பேருதான் டைம்ஷேர்'' என்று தூண்டில் போடுவார்கள். அட, நல்லா இருக்கே என்று காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தீர்கள் எனில், 2 லட்சம் ரூபாயை உங்களிடம் வசூல் செய்யாமல் விடமாட்டார்கள்.

முன்பின் தெரியாத அப்பிராணிகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து படாதபாடுபடுகிறார்கள். இத்திட்டத்தில் நடக்கும் குளறுபடிகள் பற்றியும் அசௌகரியங்களைப் பற்றியும் விளக்கமாகச் சொல்கிறார் டைம்ஷேர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.நாகப்பன்.

''சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு முன்கூட்டியே பணத்தைக் கட்டிவிடும்பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்திடம் பல்வேறு இடங்களில் இருக்கும் ரிசார்ட்களில் சுற்றுலாச் செல்லலாம். ஒருவேளை சுற்றுலாச் செல்லாவிட்டாலும் வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் செலுத்தவேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தினர் இரண்டு லட்சம் ரூபாய் தந்து, அதற்கு பராமரிப்புக் கட்டணமும் செலுத்துவது தேவை இல்லாத வேலை. அதற்கு இந்தப் பணத்தை வங்கியிலோ அல்லது

அஞ்சலகச் சேமிப்பிலோ முதலீடு செய்யும்போது வருடத்துக்கு சுமார் 17,000 ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு எளிதாக விடுமுறையைக் கொண்டாடலாம்.

சரி, ஓரளவு வசதிகொண்டவர்கள் ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் பணம் கட்டிவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சுற்றுலாச் செல்ல முடிவெடுத்து சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுக்கு போன் செய்து ரூம் இருக்கிறதா என்று கேட்டால், ''இப்ப போன் பண்ணி கேட்டா எப்படி சார், கொஞ்சம் அட்வான்ஸா கேட்டிருக்கலாம்ல'' என்று பதில் வரும். ஒருவேளை மூன்று மாதத்துக்கு முன்பு போன் பண்ணிக் கேட்டால், ''இவ்வளவு சீக்கிரம் எப்படி சார் புக் செய்யமுடியும்?'' என்பார்கள். அப்படியானால் நமக்கு எப்போதுதான் ரூம் கிடைக்கும்?

நமக்குத் தேவைப்படாத நேரத்தில் அங்கு ரூம்கள் இருக்கும். அதற்கு ஏற்றதுபோல சுற்றுலாச் செல்லும் நம் திட்டத்தை, அலுவலக விடுமுறையை, ரயில் டிக்கெட்டை  மாற்ற வேண்டும். அப்படியானால் அவ்வளவு ரூம்களும் புக்கிங்களில் இருக்குமா என்றால் அதுவும் இல்லை.

புதிதாக வருபவர்களுக்கு (அதாவது, அந்த நிறுவனத்தில் பணம் கட்டாமல் சாதாரணமாக கேட்பவர்களுக்கு) இந்த அறையினை தந்துவிடுவார்கள். நாம்தான் ஏற்கெனவே பணத்தைக் கட்டிவிட்டோமே! எனவே, புதிதாக வருபவர்களுக்கே முன்னுரிமை தருவார்கள்.

ஒருவேளை நாம் கேட்ட தேதிக்கு அறை கிடைத்து போனாலும், ஒவ்வொரு ரிசார்ட்டும் நகரத்தைவிட்டு தொலைவில்தான் இருக்கிறது. அங்கு நாம் சாப்பிட எதுவும் இருக்காது. சில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு ரூமிலும் சமையல் செய்து சாப்பிடுவதற்கான வசதி இருந்தது. இப்போது அதையும் எடுத்துவிட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு வேளைக்கு குறைந்தபட்சம் சுமார் 200 ரூபாய் செலவாகும். இப்போதெல்லாம் பல ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும்போது காலை உணவை இலவசமாகவே தருகிறார்கள். ஆனால், முன்கூட்டியே பணம் கட்டினாலும்கூட அதிகத் தொகை தந்து சாப்பிடவேண்டி இருக்கிறது.

மேலும், இந்த ரிசார்ட்கள் நகரைவிட்டு வெளியே இருப்பதால், அங்கு இருக்கும்  டாக்ஸிகளை நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  அது நிச்சயமாக வெளிமார்க்கெட்டில் இருப்பதைவிட அதிகமாகவே இருக்கும்.

தொடர்ந்து இரண்டு, மூன்று ஆண்டுகள் நாம் சுற்றுலா போய் ரூம் எடுத்துத் தங்கவில்லை. பிற்பாடு அதை மொத்தமாகச் சேர்த்து அனுபவிக்க முடியுமா என்றால், அதிலும் பிரச்னைதான். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை அனுபவித்துவிடவேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கான நேரம் வீணாகப் போய்விடும்.

இதைவிட இன்னொரு அதிர்ச்சியான செய்தி, பணவீக்கத்துக்கு ஏற்றபடி இன்னும் கூடுதல் கட்டணம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்கூட்டியே பணத்தைக் கட்டிவிட்டு, நாம் கேட்ட நேரத்துக்கு ரூம் கிடைக்காமல், ஒவ்வொரு விஷயத்துக்கும் அதிக பணத்தைச் செலவழித்து இவர்களிடம் செல்வதைவிட, மாதாமாதமாகவோ, மொத்தமாகச் சேமித்தோ, நம் விருப்பப்படி, குடும்பத்தினரின் ஆசைப்படி, சிக்கனமான முறையில்கூட சுற்றுலாச் செல்லமுடியும்.

தவிர, டைம்ஷேர் நிறுவனத்திடம் நாம் தந்த இரண்டு லட்சம் ரூபாய் சில ஆண்டுகளுக்கு  மட்டும்தான். அதற்குப் பிறகு அந்தப் பணம் நமக்குத் திரும்பக் கிடைக்காது. ஆனால், அந்தத் தொகையை நாம் வங்கியில் டெபாசிட் செய்யும்பட்சத்தில், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் நம் இஷ்டத்துக்கு சுற்றுலாச் செல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக அசலும் நம்மிடம் இருக்கும்'' என்று முடித்தார் நாகப்பன்.

பணம் நம் கையில் இருக்கும் வரைக்கும்தான் நமக்கு மரியாதை; அதை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்பதான் நாம் ஆடவேண்டும்..! உஷாராக இருங்கள் சுற்றுலா விரும்பிகளே!

Friday, April 26, 2013

New hormone could end daily injections for diabetes

A newly discovered hormone that helps the body to produce its own insulin could provide a new treatment for diabetes and end the need for daily injections by sufferers.


Researchers at Harvard University discovered that the hormone, called betatrophin, promotes the growth of cells that secrete insulin into the blood stream.

The scientists found the hormone caused mice to produce these cells at 30 times the normal rate.

They now believe it could be used to provide a more effective treatment for type 2 diabetes, which affects nearly 2.5 million people in the UK.

Rather than having to take daily injections of insulin to control the amount of sugar in their blood, patients would need to take this new hormone just weekly or even monthly, according to the researchers.

Dr Doug Melton, from the Harvard Stem Cell Institute who conducted the research, said: "If this could be used in people it could eventually mean that instead of taking insulin injections three times a day, you might take an injection of this hormone once a week or once a month, or in the best case maybe even once a year.

"We would provide this hormone, the type 2 diabetic will make more of their own insulin-producing cells, and this will slow down, if not stop, the progression of their diabetes."

Type 2 diabetes is a life long condition that occurs when the body does not produce enough of its own insulin – a hormone that helps to control the level of glucose in the blood.

If left untreated, excessive glucose in the blood can damage blood vessels and other organs, often leading to blindness and loss of limbs.

Insulin is produced in an organ called the pancreas.

The researchers at Harvard, whose work is published in the journal Cell, found that betatrophin caused a spurt in growth of cells in the pancreas that produce insulin.

Dr Melton added, however, that the work was still in the early stages and it would be several years before a treatment using the hormone could be used by humans.


http://www.telegraph.co.uk/science/science-news/10018625/New-hormone-could-end-daily-injections-for-diabetes.html

Experts Practical Tips on Women's Safety against Danger Strangers

1) What should a woman do if she finds herself alone in the company of a strange male as she prepares to enter a lift in a high-rise apartment late at night?


Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor.

 

2) What to do if a stranger tries to attack you when you are alone in your house, run into the kitchen.


Experts Say: You alone know where the chili powder and turmeric are kept. And where the knives and plates are. All these can be turned into deadly weapons. If nothing else, start throwing plates and utensils all over.


Let them break. Scream. Remember that noise is the greatest enemy of a molester. He does not want to be caught.

 

3} Taking an Auto or Taxi at Night.


Experts Say: Before getting into an auto at night, note down its registration number. Then use the mobile to call your family or friend and pass on the details to them in the language the driver understands .Even if no one answers your call, pretend you are in a conversation. The driver now knows someone has his details and he will be in serious trouble if anything goes wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker is now your de facto protector!

 

4}What if the driver turns into a street he is not supposed to - and you feel you are entering a danger zone?


Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap around his neck and pull him back. Within seconds, he will feel choked and helpless. In case you don't have a purse or stole just pull him back by his collar. The top button of his shirt would then do the same trick.

 

5} If you are stalked at night.


Expert Say: enter a shop or a house and explain your predicament. If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers always have security guards. They are also monitored by close circuit television.

Fearing identification, no one will dare attack you.


After all, being mentally alert is the greatest weapon you can ever have.

 

Thursday, April 25, 2013

Success or Failure - Ultimately You are a Winner in a way or other

There once lived a great mathematician in a village outside Ujjain. He was often called by the local king to advice on matters related to the economy. His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."

The mathematician called his son and asked, "What is more valuable – gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver? He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."

So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."

The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."


Sometimes in life, we have to play the fool because our seniors and our peers, and sometimes even our juniors like it. That does not mean we lose in the game of life. It just means allowing others to win in one arena of the game, while we win in the other arena of the game. We have to choose which arena matters to us and which arenas do not.

Wednesday, April 24, 2013

Marriage – the facts you need to know - 34

Marriage – the facts you need to know - 34

 

·         You need to know that if you don't want to spill your guts to a therapist, a marriage education program can work wonders. Check out www.smartmarriages.com.

·         You need to know that if your biggest complaint is that your meals aren't ready when you get home, you don't need couples counseling.

·         Electroshock therapy is what's needed.

·         You need to know that if one person refuses to go to marriage counseling, the other one should still go. Working on yourself never hurts.

·         You need to know a good counselor may not be able to save a bad marriage.

·         You need to know if your marriage counselor is divorced.

·         You need to know if going to the same counselor for six months hasn't helped, it's time to find a new counselor.

·         You need to know where each of you stands on sexual fidelity. You think you know. But make sure.

·         You need to know an affair is more likely to affect your marriage than a divorce. And that happens to 50 percent of marriages.

·         You need to know you can no longer fantasize about other people. Really. It's stupid.

·         You need to know that studies indicate the more sexual partners a person has before marriage, the more likely that person is to stray.

·         You need to know an affair doesn't just happen. It's a decision you make along the way.

·         You need to know research strongly suggests an affair doesn't make you happier. Even if no one finds out.

·         You need to know an affair won't do anything for your self-esteem. Except ruin it.

·         You need to know an affair won't make you feel more beautiful.

·         You need to know it's stupid to use an unsatisfactory sex life as a reason for fooling around. Your partner is having as bad a time as you are.

·         You need to know the reactions of a betrayed spouse resemble those of a soldier after coming home from combat: complete shock.

·         You need to know that husbands and wives under forty are equally capable of straying.

·         You need to know that even in so called "open marriages," infidelity leads to rage, jealousy, and abandonment fears.

·         You need to know that your adultery isn't your spouse's fault.

 

Tuesday, April 23, 2013

குட்டிச் சுட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கை குறிப்புக்கள்

ம் நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 லட்சத்து 36 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்களில் 1,61,800 பேர் மீட்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, 75,000 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.'' சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்தப் புள்ளிவிவரத்தை அளித்தவர், நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் பபன் சிங் கதோவர். சிறுவர்கள் காணாமல் போவதற்கு, சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுடன் குற்றச் செயல்களும் முக்கியக் காரணம் என்கிறது அரசு. அதே வேளையில், ஆள்கடத்தல் என்ற மோசமான சூழலும் காரணம் என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.


காணாமல்போகும் சிறுவர்களின் படங்களை வெளியிடுவது, பெற்றோர்கள், சிறுவர்களுக்கு வழிகாட்டுவது, குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான சட்ட நடைமுறைகளை அனைவரும் தெரிந்துகொள்வதற்கு, 'ட்ராக் சைல்ட்' (http://trackthemissingchild.gov.in/trackchild) என்ற சிறப்பு வலைதளத்தை, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்திவருகிறது.


சுட்டிகளின் பாதுகாப்புக்குப் பெற்றோர், ஆசிரியர், அரசு, காவல் துறை எனப் பல்வேறு தரப்பினரும் முக்கியத்துவம் தருகின்றனர். அதே வேளையில், சுட்டிகளும் தங்கள் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது அவசியம். அதற்கு நாம் சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்.


குட்டிச் சுட்டிகளுக்கு...


12 வயதுக்கு உட்பட்ட சுட்டியாகிய நான், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டு, அவற்றைத் தவறாமல் பின்பற்றுவேன்.

என் முழுப் பெயர், பெற்றோர் பெயர்கள், வீட்டு முகவரி, வீட்டுத் தொலைபேசி எண்கள் மற்றும் என் பெற்றோரின் செல்போன் எண்கள் ஆகியவை எனக்கு முழுமையாகத் தெரியும்.

எனக்குத் தெரிந்த நபரோ அல்லது தெரியாத நபரோ ஏதேனும் பொருட்களை என்னிடம் கொடுக்கும்போது, அதைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு, என் பெற்றோரிடமோ அல்லது நான் நம்பும் நபர்களிடமோ முதலில் தெரிவிப்பேன். அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெறுவேன்.

விளையாடுவதற்கோ அல்லது வெளியிலோ செல்லும்போது, என் அண்ணன் அல்லது அக்காள் அல்லது நண்பர் உடன்தான் செல்வேன்.

எனக்குப் பயமோ, குழப்பமோ ஏற்படும் வகையில், என்னை யாராவது தொட்டு அணுகினால், 'வேண்டாம்' என்று சொல்லி மறுப்பேன்.

எந்தச் சூழ்நிலையிலும் 'வேண்டாம்' என்று சொல்லக்கூடிய தைரியம் என்னிடம் உள்ளது. ஏனெனில், எனக்கு வேண்டியதைச் செய்ய, என் பெற்றோர் இருக்கிறார்கள்.

எனக்குப் பயமோ, தயக்கமோ,  குழப்பமோ ஏற்படும் சூழலைப்பற்றி, என் பெற்றோரிடம் நிச்சயம் சொல்வேன்.

நான் உறுதியாகவும், தெளிவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.


டீன் சுட்டிகளுக்கு...


டீன் ஏஜ் சுட்டியான எனக்கு, குட்டிச் சுட்டிகளின் உறுதிமொழிகளும் பொருந்தும். அவற்றுடன் கீழ்க்கண்ட விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுவேன்.

நான் தனியாக வெளியே போக மாட்டேன். எப்போது வெளியே சென்றாலும், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படுவேன். நான் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பேன் என்பதை, எனக்கு நம்பகமானவர்களுக்குத் தெரியும்படி பார்த்துக்கொள்வேன். அப்போதுதான், எனக்கு ஏதாவது ஒன்று என்றால், அவர்கள் என்னை எளிதில் அணுக முடியும்.

என் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் எவரேனும் தப்பான நோக்கத்துடன் தொட்டால், அதை உடனே தடுப்பேன்.

எனக்கு 'குட் டச்' எது? 'பேட் டச்' எது? என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இதுவரை தெரிந்திருக்கவில்லை எனில், என் பெற்றோர், ஆசிரியர் அல்லது நான் நம்பும் பெரியவர்களிடம் தெரிந்துகொள்வேன்.

எவரேனும் பாலியல் உணர்வுகளைத் தூண்டினாலோ, போதைப்பொருட்களைக் கொடுத்தாலோ, எனக்குத் தவறு எனத் தோன்றுவதைச் செய்தாலோ, என் மன உறுதியைத் தளரவிடவே மாட்டேன்.

வீட்டில் நிதி உள்ளிட்ட காரணங்களால் அமைதியற்ற சூழல் நிலவினால், அதுபற்றி ஆசிரியர்கள், நண்பர்களிடம் சொல்லி ஆலோசனை பெறுவேன்.

இனி, பள்ளிக்குச் சென்று திரும்பும்போதும், வீட்டில் தனியாக இருக்கும்போதும் கவனிக்க வேண்டியவற்றைப் பார்ப்போம்.


பள்ளிக்குச் செல்லும்போது...


பேருந்துக்காகக் காத்திருக்கும்போது, நண்பர்களுடன் குழுவாகவே இருங்கள். அது ஜாலியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

பள்ளிக்குச் செல்லும்போதும், வீட்டுக்கு வரும்போதும் எவரேனும் தொல்லைகள் கொடுத்தால், உடனடியாகப் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் சொல்லுங்கள்.

பொது இடங்களில், உங்களிடம் வயதில் பெரிய சந்தேகத்துக்குரிய நபர்கள் ஏதாவது உதவியோ, வழியோ கேட்டால், சொல்லாமல் நகருங்கள்.

உங்களுக்குத் தெரியாதவர் எவரேனும் 'லிஃப்ட்' தருகிறேன் என்றாலோ, ஒன்றாகப் பேசிக் கொண்டே பயணிப்போம் என்றாலோ, யோசிக்காமல் மறுத்துவிடுங்கள்.

உங்களை யாராவது பின்தொடர்ந்து வந்தால், அதுபற்றி உடனடியாக உங்கள் வீட்டுப் பெரியவர்களிடமோ, ஆசிரியரிடமோ தகவல் சொல்லுங்கள்.

உங்களை யாராவது சட்டெனப் பிடித்து இழுத்துச் செல்ல முற்பட்டால், 'இவர் என்னை இழுத்துச் செல்கிறார், காப்பாத்துங்க...' என்று சத்தமாகக் கூச்சலிடத் தயங்க வேண்டாம்.

உங்கள் உள்ளுணர்வுகளை நம்புங்கள். உங்களை எவரேனும் பயம், பதற்றம் அடையச் செய்தால், அதுபற்றி நம்பகமானவர்களிடம் தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்.


வீட்டியில் தனியாக இருக்கும்போது...


கதவைத் திறந்து உள்ளே நுழையும் முன், வீட்டுக்குள் இயல்பான சூழ்நிலைதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது தவறாகப்பட்டது என்றால், உடனடியாக உதவிக்குப் பெரியவர்களை அழையுங்கள்.

வீட்டில் தனியாக இருக்கும்போது, கதவை எப்போதும் பூட்டித்தான் வைத்திருக்க வேண்டும்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவையோ, அப்பாவையோ தொலைபேசியில் அழைத்து, நீங்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட தகவலைச் சொல்லுங்கள்.

உங்கள் வீட்டுத் தொலைபேசியில் யாராவது அழைத்தால், நீங்கள் தனியாக வீட்டில் இருக்கும் விஷயம், அந்த நபருக்குத் தெரியக் கூடாது.

நம்பகமான குடும்ப நண்பர்கள், உறவினர்கள் தவிர வேறு எவர் வந்தாலும், வீட்டுக் கதவைத் திறக்கக் கூடாது. அவர்களைப் பிறகு வரச் சொல்லுங்கள்.

உங்களுக்கு மிகவும் பழக்கமான பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது அவர்களுடன் பேசிப் பழக வேண்டாம். வீட்டில் பெரியவர்கள் கண்காணிப்பில்தான் அவர்களுடன் பழக வேண்டும்.

சிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு!


னதை மயில் இறகால் வருடிவிட்டு, தன்னம்பிக்கையைத் துளிர்த்தெழச் செய்யும் 'சிக்கன் சூப் ஃபார் தி சோல்' என்கிற உலகப் புகழ்பெற்ற புத்தகத்தின் பிரம்மா... ஜேக் கேன்ஃபீல்ட்! அமெரிக்காவைச் சேர்ந்த இந்த பிரபல எழுத்தாளர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அந்த 68 வயதுக்காரரின் தன்னம்பிக்கை பேச்சைக் கேட்க, நான்காயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாய் வரை லைனில் நின்று டிக்கெட் வாங்கி, கிட்டத்தட்ட 600 பேர் குழுமியிருந்தார்கள்!


ஜேக்கின் பேச்சில் ஆர்ப்பாட்டமோ, டிராமாவோ, வார்த்தை விளையாட்டுகளோ எதுவுமே இல்லை. மிகவும் இயல்பாக நம் வீட்டில் இருக்கும் பெரியப்பா மாதிரி... அன்பும் அக்கறையும் ததும்ப பேசுகிறார். ஆனால், ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்திருக்கும் அனுபவ செறிவு, அடைபட்டுக் கிடக்கும் நம் சிந்தனை நரம்புகளைத் தட்டி எழுப்புகின்றன.


''வேகம்... வேகம்... வேகம்... என்று ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆற அமர கதை படிப்பதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. அதுவும் நீதிக்கதைகள் என்றால்... ஓடியே போய்விடுவார்கள். ஆனால், கதைகள் மூலமாக கோடிக்கணக்கான வாசகர்களின் வாழ்க்கையில் ஓர் மிகப் பெரிய மாற்றத்தை உங்களால் எப்படி ஏற்படுத்த முடிந்தது?''


''தாங்க்யூ!'' என்று பாராட்டுக்கு நன்றி சொல்லிவிட்டு மிகவும் மென்மையாக பேச ஆரம்பிக்கிறார் ஜேக்.


''இதெல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை. அடிப்படையில் நான் ஓர் ஆசிரியர். சிகாகோ நகரில், முரட்டுக் காளைகளாக திமிரும் இளைஞர்களிடம் ஆப்ரிக்கன் - அமெரிக்கன்ஸ் பற்றி நான் எதேச்சையாக சில கதைகளைச் சொல்ல, அவர்கள் அதை ஆர்வமாகக் கேட்டார்கள். வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படும் கதைகளுக்கு இருக்கும் சக்தியை அப்போதுதான் முதல் முதலாக உணர்ந்தேன். அப்போது எனக்கு வயது 24'' என்று சொல்லும் ஜேக், இதன் பிறகு சொன்னதுதான் ஹைலைட்.


''நானும் என் நண்பர் மார்க் விக்டரும் 101 நல்ல கதைகளை தொகுத்துக் கொண்டு, ஒன்றல்ல இரண்டல்ல... 144 பதிப்பாளர்களை சந்தித்தோம். 'இக்காலத்தில் யார் குட்டிக் கதைகளைப் படிப்பார்கள்!' என்று ஏளனம் செய்தார்கள். 'அது என்ன சமையல் குறிப்பா எழுதி வந்திருக்கிறாய்... என்ன தலைப்பு இது?' என்று கிண்டல் அடித்தார்கள்.


கிராமப்புறங்களில் இன்னும் பல வெள்ளைக்காரத் தாய்மார்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் ஊட்ட, சிக்கன் சூப்தான் கொடுப்பார்கள். ஒரு வகையில் இந்தக் கதைகளும் 'சிக்கன் சூப்' போலத்தான். இது மனசுக்கான சிக்கன் சூப் என்கிற என் விளக்கத்தையும் கேலி செய்தார்கள்.


இதற்கெல்லாம் தளராமல், 'சிக்கன் சூப் ஃபார் தி சோல்' புத்தகமாக வெளிவந்தால் காசு கொடுத்து வாங்குவேன் என்று இருபதாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு பதிப்பகத்துக்கு போனோம். மனம் தளராமல் புதுப்புது வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை அனுபவப்பூர்மாக கற்றுக்கொண்ட தருணம் அது.


வாழ்க்கை 'ஏ.சி' அறையில் உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுக்காது. அது ஒரு கண்டிப் பான வாத்தியார். என்னுடைய வாழ்க்கை யையே உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், என் இளமைக் காலம் இனிமையானது இல்லை. எனக்கு வாய்த்தது, சதா சர்வநேரமும் கோபத்தில் இருக்கும் அப்பாவும்... குடிக்கு அடிமையாகிவிட்ட அம்மாவும்தான். இருந்தாலும் சிரமப்பட்டு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். கல்விக்கூடங்களை விடவும் வாழ்க்கை எனக்கு ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்தது.


பலவிதமான சூழ்நிலைகளில் உருண்டு புரண்டு நானும் என் நண்பனும் பார்த்தது 101 வாழ்க்கை கதைகள்தான். ஆனால், இதேபோல உலகில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் எத்தனை கதைகள் இருக்கும்? எங்கள் முதல் புத்தகத்தின் கடைசியில்... 'உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற குட்டிக் கதைகளை நீங்கள் ஏன் எங்களுக்கு எழுதி அனுப்பக் கூடாது?' என்று இரண்டு வரி எழுதினோம். விளைவு... நாள் ஒன்றுக்கு எங்களுக்கு 200 கதைகள் வரத்துவங்கின. இவையெல்லாம் இப்போது 47 மொழிகளில் 225 புத்தகங்களாக உருவெடுத்திருக்கின்றன. இதுவரை ஐந்து கோடி புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகி இருக்கின்றன!''  


- புன்னகை மாறாமல் பேசும் ஜேக் சொல்லும் வெற்றிக்கான ஃபார்முலா, அருமை.


''ஒருவர் வெற்றியாளராக திகழவேண்டுமானால், 'வில் பவர்' முக்கியம். ஆனால் 'வில் பவர்' என்ற பத்து குதிரைகள் ஒரு திசையிலும், தப்பான குணங்கள் என்ற 90 குதிரைகள் எதிர் திசையிலும் நம்மை இழுக்கும்போது 'வில் பவர்' தோற்றுப் போய்விடும். தப்பான குணங்கள் என்கிற 90 குதிரைகளின் திசைகளை மாற்ற முடியாது. ஆனால், அவற்றை கழட்டிவிட முடியுமே. எத்தனை தப்பான குதிரைகளை மனதில் இருந்து கழட்டி விடுகிறோமோ... அந்த அளவுக்கு 'நமது வில்' பவர் அதிகரிக்கும்'' என்றவரிடம், ''தனியறையில் உட்கார்ந்து நாம் பேசும் இந்த தத்துவங்கள் எல்லாம் ஏதோ ஒரு முயற்சியில் இறங்கி, நஷ்டத்தில் வீழ்ந்துவிட்ட ஒருவருக்கு எப்படி உதவும்?'' என்றோம்.


''பணக்கஷ்டம் என்பது யாருக்கும் புதிதல்ல. ஹென்றி ஃபோர்டு கம்பெனி ஐந்து முறை திவாலாகி இருக்கிறது. வால்டி டிஸ்னி மூன்று முறை திவாலாகி இருக்கிறார். படச்சுருள்களை பயன்படுத்தும் கேமராக்கள் வழக்கொழிந்து டிஜிட்டல் கேமராக்கள் வந்த சமயம் கோடக் கம்பெனி மிகப்பெரிய திவால் நிலையைச் சந்தித்தது. வியாபாரத்தில் நஷ்டம், பணச்சிக்கல்... எல்லாம் சர்வ சாதாரணமானது. இவற்றைக் கண்டு ஒருவர் எப்போதும் சுருண்டு உட்கார்ந்து விடக்கூடாது.


வியாபாரத்தைப் பொறுத்தவரை ஒன்று லாபம் கிடைக்கும். அல்லது, எதை செய்யக்கூடாது என்கிற பாடம் கிடைக்கும். இரண்டுமே நல்லதுதான்!''


- விரல்களில் வெற்றிச் சின்னம் காட்டி சிரிக்கிறார் ஜேக்!

காய்கறி, பழங்களுக்குப் பின்னால் சில ஆபத்துக்கள்

'தளதள, பளபள' என்று கண்களைப் பறிக்கும் விதத்தில் காய்கறி, பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகைப் பார்க்கும்போதே, நம்மில் பெரும்பாலானோருக்கு உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று கையும், மனமும் துறுதுறுக்கும். அவற்றுக்குப் பின்னால் சில ஆபத்துக்களும் இருக்கின்றன என்பது நிறைய பேருக்கு தெரியாது... அல்லது, அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க ஆர்வமோ, நேரமோ இருக்காது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்தகைய ஆபத்துகளை 'அவாய்ட்' பண்ண உதவும் வகையில், சில ஆலோசனைகள், 

 பச்சைத் தக்காளி... ஜாக்கிரதை!

 தக்காளிச் செடியின் இலைகளிலும் இலை நரம்புகளிலும் அட்ரோபைன் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது மயக்கம், தலைவலி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியது. பச்சை நிறத் தக்காளிக் காய்களிலும் ஓரளவுக்கு இது இருப்பதால், முடிந்த வரை பழுத்த தக்காளிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

அழுகலை நீக்கினால்... ஆபத்து குறையாது!

சில பழங்களில் ஒரு பகுதி பூஞ்சையால் தாக்கப்பட்டு அழுகிப்போயிருக்கும். பழத்தின் இதர பகுதிகள் நன்றாக இருப்பது போலத் தோன்றும். ஆனாலும் கண்ணுக்குத் தெரியாத மைசீலியம் என்னும் பூஞ்சை இழைகள் அந்தப் பகுதியிலும் ஊடுருவி இருக்கும். எனவே, பழம் அழுகத் துவங்கிவிட்டது என்றால், அந்த பகுதியை மட்டும் நீக்கிப் பயன்படுத்தாமல், முழுவதுமாகவே தூக்கி எறிவதுதான் உத்தமம். 

வைட்டமின் 'கே'... எச்சரிக்கை தேவை!

கீரைகள், காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் 'கே' அதிகம் உள்ளது. இது உடலுக்கும் நல்லது. ஆனால், ரத்தம் உறைவதில் பிரச்னை இருப்பவர்களுக்கு வைட்டமின் 'கே' ஆகாது. எனவே, இந்த வகையை சேர்ந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

அருகம்புல் சாறு...  அவாய்ட் ப்ளீஸ்!

இப்போதெல்லாம் காலை நேரத்தில் நடை பயிற்சி செய்பவர்கள் அருந்தும் 'ஆரோக்கிய பானம்' என்று அருகம்புல் சாறு நினைக்கப்படுகிறது. அருகம்புல் விளைந்த இடம், சேகரிக்கப்பட்ட விதம், அது நன்கு கழுவப்பட்டதா என்ற விவரம் எதுவும் தெரியாமல் அதைப் பலரும் அருந்துகிறார்கள். சாக்கடை ஓரங்களிலும், குப்பைக் கூளங்கள் அருகிலும் பிடுங்கப்பட்டு, சரிவரக் கழுவாமல்தான் பல இடங்களிலும் ஜூஸ் விற்கிறார்கள். வாக்கிங் போய், ஆரோக்கியம் அடைவதற்குப் பதிலாக, வியாதிகளை வாங்கி வந்துவிடாதீர்கள். வெளியிடங்களில் அருகம்புல் சாறு வாங்கி அருந்துவதில் ஜாக்கிரதையாக இருங்கள்.

திராட்சைப் பழங்கள்...  தடாலடி வியாபாரம்!

பூச்சிகளின் தாக்குதலில் இருந்து திராட்சைகளைக் காப்பதற்காகப் பூச்சி மருந்துகளை சர்வ சாதாரணமாக அடிக்கிறார்கள். மருந்து தெளித்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் சந்தைக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால், பறித்த பழங்களுக்குக் கூட மருந்து அடிக்கும் கொடுமை நடக்கத்தான் செய்கிறது. உப்பு கலந்த தண்ணீரில் நன்கு கழுவினால், பூச்சி மருந்துகளின் மிச்சம் மீதி பழங்களில் ஒட்டிக் கொண்டுஇருந்தாலும் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு... உஷார்!

முளைவிடாத உருளைக்கிழங்காகப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள். சில உருளைக்கிழங்குகளில் உள்ளே பச்சையாக இருக்கும். அதில் சொலானைன் என்ற வேதிப்பொருள் உள்ளது. அது ஜீரணக் கோளாறுகளை உண்டாக்கும்.

மாம்பழமாம் மாம்பழம்... கார்பைடு மாம்பழம்!

பழுக்க நாளாகும் என்பதற்காக மாம்பழ மண்டிகள் பலவற்றில் கார்பைடு கற்களை மாம்பழக் குவியல்களுக்கிடையே வைத்து செயற்கையாகப் பழுக்க வைக்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் தீங்கை  விளைவிக்கும். கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிய சில உபாயங்கள் உண்டு. அந்த மாம்பழங்களை ஈ நெருங்காது. ஒரேசீரான வண்ணத்தில் பழங்கள் இருக்காது. மாம்பழம் வாங்கும்போது கவனம் செலுத்துங்கள்.

ஆப்பிள் விதைகள்... அவஸ்தை !

ஆப்பிளைச் சாப்பிடும்போதோ அல்லது ஜூஸ் போடும்போதோ கட்டாயமாக விதைகளை நீக்கிவிடுங்கள். அவற்றில் சையனோஜெனிக் கிளைகோஸைட் என்ற வேதிப் பொருள் இருக்கிறது. அது உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது. 

கேரட், முள்ளங்கி... கேர்ஃபுல்!

இது சுற்றுலா சீஸன் அல்லவா? மலைப்பாதையில் பயணம் போகும்போது சாலை ஓரத்தில் புத்தம் புதிய கேரட்டுகளும், முள்ளங்கிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வயலில் பறித்துவரும் கேரட், முள்ளங்கிகளை அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில் சுத்தம் செய்து விற்பார்கள். அந்த தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்படுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழுத் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளரிக்கு 'நோ' சொல்லுங்கள்!

அநேகமாக வெள்ளரிக்காய்களைத் தோல் நீக்கிக் கூடைகளில் வைத்து விற்பார்கள். அவற்றை ஈக்கள் மொய்த்திருக்கும். சுத்தமாக இல்லாத கைகளால் எடுத்து விற்பார்கள். தாகம் தணிவது என்னவோ உண்மைதான். ஆனால், நோய்த்தொற்றுக்கு வாய்ப்பு அதிகம். அது போன்ற வெள்ளரியை கண்டிப்பாக தவிருங்கள்