Wednesday, May 1, 2013

போதைக்கு அடிமையாகி, விடுபட எண்ணம் இருந்தால் ....

றைவுப் பழக்கங்களாக இருந்த போதை முறைகள், சமுதாயத்தில் நிரந்தர அத்தியாயமாகவே மாறிவிட்டது. உலகைச் சீரழித்துவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் நலமாக வாழ்ந்து வருபவர்கள் அபூர்வமாகிவருகின்றனர்.   

மது, அந்தஸ்தின் சின்னமாக மாறிவிட்ட நிலையில், சமுதாய விழிப்பு உணர்வுடன் எழுதப்பட்ட 'போதை ?' என்னும் இந்த நூல், போதையில் மூழ்கிக்கிடப்பவர்கள் மீள்வதற்கான அற்புத வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

''போதைப் பொருட்கள் அனைத்துமே மனம் சார்ந்ததுதான். பெரும்பாலும், உடல் களைப்புக்கு, வலிகளைப் போக்குவதற்கு மருத்துவரின் அறிவுரையின்பேரில் உட்கொண்டால், அத்தகைய செயலைப் போதைப் பொருள் பழக்கமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மனநிலையை மாற்றுவதற்காகத் தானாகவே முன்வந்து தன் இஷ்டம்போல் உட்கொண்டால் அதுவே போதை பழக்கமாகும்'' என்கிறார் நூலாசிரியர் டாக்டர் மா.திருநாவுக்கரசு.

''மேலும் மேலும் இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமாக பயன்படுத்தும்போது, அதில் திருப்தி பெறுவது மிகவும் கடினம். இயலாத விஷயம். மகிழ்விக்கும் காரியங்களில் மனிதன் மூழ்கி நேரம், பொருள், தன்மானம், கௌரவம் அனைத்தையும் இழக்கத் தயாராகிறான். இந்த நிலையில்தான் போதை எதையும் செய்யத் துணிகிறது'' என்று போதைக்கு அடிமையானவர்களின் மன ஓட்டத்தை 'பளிச்'செனப் புரியவைத்திருக்கிறார் நூல் ஆசிரியர்.

குடிப் பழக்கம் ஒரு நோயாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஓர் ஆரம்பம் மற்றும் ஒரு முடிவு இருக்கிறது. அதேபோல் குடிப் பழக்கம் யதேச்சையாக ஆரம்பித்துப் படிப்படியாகப் பல நிலைகளைக் கடந்து, பூதாகாரமாகி சம்பந்தப்பட்ட நபரையே அழித்துவிடுகிறது. அந்தப் பாதிப்புகளைக் கதைபோல் விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

போதைக்கு அடிமையாகி விடுபட எண்ணம் இருந்தாலும் பெரும்பாலானோர் முயற்சி எடுக்காமல் மீண்டும் போதை என்னும் புதை குழிக்குள்ளேயே விழுகின்றனர். சிகிச்சை முறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தால் உரிய நிவாரணம் கிடைப்பது உறுதி. இரண்டு வருடங்கள் ஆகும்.

''பொதுவாக, குடிப் பழக்கத்தை நிறுத்துவதற்கு மட்டும்தான் ஞிமீtஷீஜ்வீயீவீநீணீtவீஷீஸீ என்ற சிகிச்சை தருகின்றனர். திரும்பவும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கு 'போதைப் பழக்க மாற்று சிகிச்சை' (ஞிமீணீபீபீவீநீtவீஷீஸீ) என்ற சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதைச் சிறப்புப் பயிற்சி பெற்ற மனநல மருத்துவர்களால் மட்டுமே அளிக்க முடியும்'' எனவும் வழி சொல்கிறார் நூல் ஆசிரியர்.

போதை என்றால் என்ன? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அதன் நிலைகள், விளைவுகள், சிகிச்சைகள், விடுபட வழிகள், நிரந்தரத் தீர்வு என அனைத்து விஷயங்களையும் எதிர் எதிரே அமர்ந்து உரையாடுவது போன்ற நடையில் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

போதைக் கணவரால் சித்ரவதைப் படும் பல பேதைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க 'போதை ?' என்ற இந்த நூல் பெரிதும் கைகொடுக்கும்