Friday, August 16, 2013

பாலியல் தொந்தரவு பிரச்னைகளைத் தவிர்க்க...

பிரச்னைகளைத் தவிர்க்க...

 பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடக்கலாம். ஆனால் அதனைத் துணிச்சலோடு எதிர்க்கும் குணத்தை பெண்களிடம் உருவாக்க வேண்டும்.

 குழந்தைப் பருவத்தில் அப்பா, அம்மா, சகோதரன், திருமணத்துக்குப் பின் கணவரைத் தவிர வேறு எந்த ஆணாக இருந்தாலும் உள்ளாடை போடும் இடங்களை தொடக் கூடாது. அப்படிச் செய்வது பாலியல் தொந்தரவு என்பதை, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

 சில ஆண்கள், தேவையற்ற சமயங்களில்கூட தாங்களாகவே முன்வந்து உதவிசெய்வார்கள். சிலர் இரட்டை அர்த்தத்தில் பேசி சிரிக்கவைக்க முயற்சிப்பார்கள். ஒருசிலர் சாதாரணமாகத் தொடுவதுபோல தோளைத் தொட்டுப் பேசத் தொடங்குவார்கள். இவர்களை முதலிலேயே தவிர்த்துவிட வேண்டும்.

 மூன்றாவது நபர்கள், நாம் கேட்காமலே உதவிசெய்ய வந்தால், அதில் வில்லங்கம் இருக்கிறது என்பதை பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அதனை முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது.

 'உங்க புடவை கலர் சூப்பர்... டிசைன் நல்லா இருக்கு' என்று பேச்சைத் தொடங்கும்போது 'என் புடவை எந்த நிறத்தில் இருந்தால் என்ன சார், வேலையைப் பாருங்கள்' என்று கறாராக சொல்லிவிட்டால், அடுத்த 'மூவ்' தவிர்க்கப்படும்.

 அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டு நம்மைக் கவனிக்கும் ஆண்களிடம், பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் அடிக்கடி போன் செய்தாலும், எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் உடனே கண்டிக்க வேண்டும்.

 ஆண் தன்னிடம் தவறாகப் பழகுகிறான் என்பதை, பெண்களால் எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும். அப்படித் தெரிந்துவிட்டால், தயவுதாட்சண்யமே பார்க்காமல், 'தப்பு பண்ற... இனி எங்கிட்ட பேசாதே'னு சுருக்கமாக அதே சமயத்தில் துணிச்சலான குரலில் சொல்லிவிட வேண்டும்.

 சில பெண்களுக்கு சிரிக்கவைக்கும் ஆண்களைப் பார்த்து ஈர்ப்பு ஏற்படலாம். அப்படி நடப்பதை உணரத் தொடங்கியதுமே அத்தகைய நட்பை உடனே துண்டித்துவிட வேண்டும். தவறு எந்த பக்கத்திலும் இருந்து வரலாம். ஆனால் பெண்கள் அதிகக் கவனமாக இருந்து தேவையற்ற பழியை சுமக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,

 அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, அவர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களே பாலியல் தொந்தரவு எப்படி ஏற்படலாம் என்பது குறித்தும், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.