Tuesday, September 10, 2013

திருமணத்தில் உணவுப் பொருள் வீணாவதை தவிர்க்க ஓர் இனிப்பான ஐடியா!


இனிப்பான ஐடியா!

ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். பந்தியில் பரிமாறிய சப்ளையர்களில் ஒருவர் மட்டும் காகிதப் பைகளை கத்தையாக கையில் கொண்டு வந் தார். சாப்பிடுபவர்களிடம், ''பேப்பர் பேக் வேணுமா..?'' எனக் கேட்டு, விரும்பியவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே சென்றார். 

இது எதற்கு என முதலில் புரியவில்லை. ஸ்வீட் பிடிக்காதவர்கள் மற்றும் அதை சாப்பிடக் கூடாதவர்கள், தங்கள் இலையில் வைக்கப் பட்டிருந்த இனிப்புகளை அந்த பேப்பர் பேக்கில்போட்டு, கையோடு எடுத்துச் சென்றதை பார்த்தபோது தான், விஷயம் எனக்கும் புரிந்தது. 'இது நல்ல ஐடியா'தானே! இதனால் உணவுப் பொருள் வீணா வதை ஓரளவு தவிர்க்கலாம்தானே! 

தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களில் இந்த ஐடியாவைச் சொல்லி பின்பற்றச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டேன்.