Monday, November 4, 2013

கல்யாணச் செலவு - காஞ்சிப்பெரியவர்

* சமூகத்தில் திருமணத்தைப் பெரிய பொருளாதாரப் பிரச்னையாக மாற்றி இருப்பது அக்கிரமமான செயல்.

* வரதட்சணையை எதிர்பார்க்காமல் பெண்ணின் குணத்திற்காக திருமணம் செய்து கொள்ளும் நல்ல மனம் நமக்கு இருக்க வேண்டும்.

* இந்தக் கால திருமணத்தில் நடக்கும் ஆடம்பர விஷயங்களும், பெண்வீட்டாரிடம் வரதட்சணையாக சீர்செனத்தி கேட்பதும் சாஸ்திரத்திற்கு ஏற்புடையது அல்ல.

* மாப்பிள்ளை அழைப்பை திருமணத்தின் முக்கிய அம்சமாக நடத்துகின்றனர். இது சாஸ்திரத்தில் அடியோடு இல்லாத விஷயம். இதற்கென ஒரு மந்திரமும் கிடையாது.

* செல்வந்தராக இருந்தாலும் கல்யாணத்தை தடபுடல் இல்லாமல் சிக்கனத்தைக் கடைபிடித்து மற்றவருக்கு ஒரு முன்மாதிரியாக நடந்து காட்ட வேண்டும். 

* பலபேருக்கு ஒரு பொதுஇடத்தில் பொதுச்செலவில் திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்யலாம். இதனால் கல்யாணச் செலவு பெருமளவு குறையும்.

காஞ்சிப்பெரியவர்