Tuesday, October 28, 2014

குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் (2 முதல் 5 மாதங்கள் வரை)

புதிதாகப் பெற்றோர் ஆனவர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் (2 முதல் 5 மாதங்கள் வரை)

குட்டிப் பார்வையாளர்

புதிதாகப் பெற்றோர் ஆனவர்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்கான குறிப்புகள்:

1.பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்ந்து பார்த்தல், தொடுதல் ஆகிய 5 ஐம்புலன்கள்-உணர்வுகள் மூலமே உலகை குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.

2.பெற்றோரின் குரல், சிரிப்பு ஆகியவற்றைப் பின்பற்றி, அதைத் தாங்களும் செய்து பார்க்கக் குழந்தைகள் குதூகலத்துடன் முயற்சி செய்வார்கள்.

3.குழந்தையை நம்முடன் அணைத்துக்கொள்ளும்போது மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை அவர்கள் ஒருசேர உணர்வார்கள்.

சுய உணர்வு: இப்போது குழந்தை தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு, அமைதியாவது எப்படி என்று கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்.

உடல்: குழந்தை தன் உடலைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

உறவு: பெற்றோர் குழந்தையுடன் மென்மையாகப் பேசி, விளையாடினால் குழந்தைக்கு ரொம்பவும் பிடிக்கும்.

புரிதல்: சுவாரசியமான பொருள்களைக் கொடுக்கும்போது உலகை, உலகிலுள்ள பொருட்களைக் குழந்தை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும்.

கருத்துப் பரிமாற்றம்: குழந்தையைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி குழந்தையிடம் பேசுங்கள். குழந்தை பேசத் தொடங்கும் காலத்தில் பல சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த அனுபவம் உதவும்.