Monday, March 16, 2015

புத்திசாலித்தனமாக உரையாடுங்கள்! (Conversational Intelligence)

புத்திசாலித்தனமாக உரையாடுங்கள்!

புத்தகம்: கான்வர்சேஷனல் இன்டெலிஜென்ஸ் (Conversational Intelligence)

ஆசிரியர்: ஜுடித் இ் கிலேசர் (Judith E Glaser)

பதிப்பகம்: Bibliomotion Inc

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்து வது ஜுடித் இ கிலேசர் எழுதிய 'கான்வர்சேஷனல் இன்டெலி ஜென்ஸ்' என்னும் புத்தகத்தை.

மற்றவர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்து நல்லதொரு தலைவனாய் திகழ்வது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம், புத்திசாலித்தனமாக கலந்துரையாடுவது எப்படி என்பதையும் சொல்லுகிறது.

உரையாடல் என்பது நாம் சாதாரணமாக நினைப்பதுபோல சாமான்யமானது இல்லை என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார்.

நாம் சாதாரணமாக மற்றவர்களிடம் தகவல் பரிமாற்றத்துக்காகவும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்காகவும், நம்முடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்வ தற்காகவும் பேசும் பேச்சைப் போன்ற ஒன்று என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. உரையாடல் என்பது உயிரூட்டமுள்ள, மனதினுள் ஊடுருவக்கூடிய, ஆட்கொள்ளக்கூடிய சக்தியைக் கொண்டது. உரையாடல்கள் ஆதிக்கம் செலுத்தவும், ஆதிக்க சக்தியை இணைத்துக்கொள்ள உதவும் ஒரு பெரிய விஷயமாகும்.

குறிப்பாகச் சொன்னால், உரையாடல்கள் என்பது நீங்கள் எப்படி ஒரு விஷயத்தைப் பார்க்கிறீர்கள் என்பதையும், மற்றவர்கள் அந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வைக்கும் பாலமாக அமைகிறது. குடும்பமோ, வியாபாரமோ, உறவுகளோ எதிலுமே உரையாடலில் புத்திசாலித்தனம் என்பது வெற்றி களைக் குவிக்க மிகவும் உதவுவதாய் இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

நம் கலாசாரத்தின் தரம் மற்றும் மற்றவர்களிடம் நமக்கு இருக்கும் உறவின் தரம் போன்றவை நம் உரையாடலின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. நம் உரையாடலே நம்முடன் பேசும் நபரின் மூளையில் பல கெமிக்கல்களைச் சுரக்கச் செய்கிறது. அந்த கெமிக்கல்கள் மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நினைப்பது நடக்கவும்; கேட்பது கிடைக்கவும் தரமான உரையாடலே உதவுகிறது. உரையாடலில் புத்திசாலித்தனம் என்பது நம் உள்மனதில் நினைக்கும் விஷயங்களை அப்படியே அதீத சக்தியுடன் மற்றவரைச் சேர்ந்தடைய உதவுகிறது. உரையாடல்கள் உற்சாகத்தை யும், சோகத்தையும், துக்கத்தை யும் எப்படிக் கொண்டுவரு கிறது என்பதை நாம் அன்றா டம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

 அதேபோல் உரையாடலில் புத்திசாலித்தனம் என்பது நாம் காண்பதை எப்படி நம் தேவைக்கு ஏற்றாற்போல் உருவகப்படுத்திச் சொல்லி பயனடைய முடியும் என்பதையும் நிர்ணயிப்பதாய் அமைகிறது. ஓர் உரையாடல் வலியையோ, சந்தோஷத்தையோ வெற்றிகரமாகக் கொண்டுவருவதற்கு, உரையாட லில் புத்திசாலித்தனமே மிகவும் உதவி செய்வதாய் இருக்கிறது.

உரையாடல்களே உணர்ச்சிகளைத் தூண்டி செயலாக்க வைக்கும் சக்திகொண்டதாய் இருக்கிறது என்று சொல்லும் ஆசிரியர், நாம் அனைவரும் உரையாடல் குறித்து நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று உண்டு என்கிறார். நாம் உரையாடும்போது ஒருபோதும் நாம் நடுநிலைமையான கருத்துக்களை மட்டும் வைத்து உரையாடுவதில்லை. உரையாடல் எப்படி மூளையின் பல்வேறு பகுதிகளைத் தூண்டிவிட்டு கெமிக்கல்களைச் சுரக்க வைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் தெளிவாக பயனளிக்கக்கூடிய வகையிலான உரையாடல்களை நம்மால் எப்போதும் தொடர்ந்து செய்ய முடியும் என்கிறார் ஆசிரியர்.

நல்லதொரு உரையாடலைச் செய்யும்போது, நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதைப்போல் உணர்கிறோம். அந்தவேளையில் நாம் நம்முடன் உரையாடுபவர்களுடன் இணைந்திருப்பதைப் போல் உணர்கிறோம். அந்த ஆள் நல்ல மாதிரியப்பா! நாம் நினைப்பதை பகிர்ந்துகொள்ளலாம் என்று சிலரை மட்டும் குறிப்பிடுகிறோமே, ஏன்? அவருடன் நாம் ஏற்கெனவே நடத்தியுள்ள உரையாடல்களில் இருந்து நாம் பெற்ற நம்பிக்கையினாலே தான் இல்லையா!? பலருடனும் நாம் உரையாடுகிறோம். ஆனால், சிலருடன் மட்டுமே தொடர்பைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள நினைக்கிறோம். ஏன் தெரியுமா? நாம் அவருடன் நடத்திய உரையாட லின் தரம்தான் என்கிறார் ஆசிரியர்.

நம் உரையாடலின்போதுகூட, இருப்பவரின் மீது நம்பிக்கை வராமல் போவதற்குப் பெரிய காரணம் எது தெரியுமா? உரையாடலேதான். நம்முடன் உரையாடுபவர் குறித்து நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும்போது, நம்முடைய குரலே மாற ஆரம்பித்து விடும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

பெரும்பாலான உரையாடல்களில் ஒரே வார்த்தையே நம்பிக்கையை வரவழைக்கவும் செய் கிறது அல்லது நம்பிக்கையை ஒட்டுமொத்தமாகத் துடைத்து எறியவும் செய்துவிடுகிறது என்று சொல்லும் ஆசிரியர், ஒருமுறை நாம் ஒருவரிடம் செய்த உரையாடலில் சிறு கசப்பு வந்துவிட்டாலும் கூட, அது நம்முடைய மூளையில் பதிவாகிக்கொண்டு விடுகிறது. அடுத்து எத்தனைமுறை அவரைச் சந்தித்தாலும், அந்தப் பழைய நினைவுகள் உடனடி யாக நம்முடைய நினைவுக்கு வந்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர்.

சரி, ஏதோ ஒரு காரணத்தால் ஓர் உரையாடலில் நமக்கு ஒருவரின் மீது நம்பிக்கைப் போய்விடுகிறது. அந்த நம்பிக்கையின்மை நிலையில் இருந்து எப்படி நம்பகத்தன்மையை வளர்க்க முயல்வது என்பதையும் ஆசிரியர் தெளிவாகப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

நம்முடைய மூளையின் முக்கியக் குணாதிசய மாக ஆசிரியர் சொல்வது, நல்ல அனுபவங்களை சினிமாபோல் எடுத்து டாக்குமென்ட் செய்து வைத்துக்கொள்ளும் திறனேயாகும். ஒவ்வொரு புதுச் சூழலில் நாம் இயங்கும்போதும் மூளையில் இருக்கும் டாக்குமென்டரி டிவிஷனில் இருந்து இந்தவகை சினிமாக்கள் திரையிடப்பட்டு அன்றைய சூழ்நிலையில் படிக்கப் பட்ட பாடங்கள் நினைவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கைச் சூழலிலும் நாம் ஏற்கெனவே கற்ற பாடம் என்ற படம் திரையிடப்பட்டு, அதைக்கொண்டே நம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய கட்டாயத் திலேயே நம் மூளையின் செயல்பாடு கட்டமைக் கப்பட்டுள்ளது என்கிறார் ஆசிரியர்.

புத்திசாலித்தனமாக உரையாடுவது பற்றி உதாரணங்களுடன் இந்தப் புத்தகத்தில் விளக்கிஇருக்கிறார் ஆசிரியர். உரையாடல்களைச் செய்யும்போது நாம் கவனிக்கத் தவறும் ஐந்து விஷயங்களை ஆசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். முதலாவதாக, நாம் என்ன பார்க்கிறோம், என்ன நினைக்கிறோம், என்ன உணர்கிறோம் என்பதை, அடுத்தவர் அதே வடிவத்தில் உள்வாங்கிக்கொள்வார் என்று நினைத்து செயல்படுவது. இரண்டாவதாக, பயம், நம்பிக்கை, அவநம்பிக்கை போன்றவை நாம் எப்படி நம்முடைய கண்ணால் சாதாரணமாகக் காண்பவை குறித்து முடிவு செய்கிறோம் என்பதைப் பெருமளவில் மாற்றிவிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது.

மூன்றாவதாக, எதிராளியின் நிலைமையில் அவர் எதனை எதிர்பார்ப்பார் என்பதை முற்றிலு மாக உணர மறப்பது. நான்காவதாக, நாம் அடுத்த வர்கள் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்று நினைத்து உரையாடுகிறோம். அது தவறு. அடுத்தவர்கள் சொல்வது குறித்து நம் எண்ணம் என்ன என்பதையே நாம் நினைவில் வைத்துக்கொள்கிறோம் என்பதே உண்மை. ஐந்தாவதாக, ஒரு சொல்லின் அர்த்தம் சொல்பவரின் மனதில் இருந்து வருகிறது என்று நாம் நம்புவதாகும். இது தவறு. கேட்பவரின் மனதில் என்ன இருக்கிறதோ, அதற்கு ஏற்றாற்போலவே ஒரு சொல்லின் அர்த்தம் மாற்றிக்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை.

இந்த விஷயங்களை நாம் கவனிக்கத் தவறுவதால், உண்மை நிலைக்கும் நம் புரிதலுக்கும் இடையே எக்கச்சக்கமான வித்தியாசம் வந்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர். அலுவலக மீட்டிங்கோ, நண்பர்களோ, உறவுகளோ...  இவர் களையெல்லாம் சந்திக்கப்போகும் தருணத்தில் மூளைக்குச் சரியான பாசிட்டிவ் தகவல்களைத் தந்து சிறந்த பலன்களைப் பெறுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், வெற்றிகரமாக வாழ ஒவ்வொரு உரையாடல்களுக்கும் முன்னால் மூளைக்கு நிறையவே வழிநடத்துதல்களை நாம் தரவேண்டும் என்று வாதிடுகிறார்.

நம்பவே முடியாத நபர்களுடன் பேசும்போது கையைப் பலமாகக் குலுக்குவதன் மூலம் மூளைக்கு நம்பிக்கையான நபர் என்ற சிக்னலை அனுப்பிவைக்கலாம். ஏனென்றால், கைகுலுக்கினால் அவர் நண்பர் என்ற சிக்னல் மூளைக்குச் செல்கிறது என்கிறார் ஆசிரியர்.  இதுபோன்ற பல்வேறு நடைமுறை செயல் திட்டங்களைச் சொல்லி அவற்றைச் செயலாக்குவதன் மூலம் புத்திசாலித்தனமாக உரையாடும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர்.

கொஞ்சம் கடின நடையில் இருக்கும் இந்தப் புத்தகத்தை, வேலையில் இருப்பவர்களானாலும், சுயமாக தொழில் செய்துவருகிறவர்களானாலும் சரி, செய்யும் செயலில் வெற்றி பெற நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.


"Conversational Intelligence: How Great Leaders Build Trust and Get Extraordinary Results" 
English | 2013 | ISBN: 1937134679 | 230 pages | EPUB | 3,3 MB

The key to success in life and business is to become a master at Conversational Intelligence. It's not about how smart you are, but how open you are to learn new and effective powerful conversational rituals that prime the brain for trust, partnership, and mutual success. Conversational Intelligence translates the wealth of new insights coming out of neuroscience from across the globe, and brings the science down to earth so people can understand and apply it in their everyday lives. Author Judith Glaser presents a framework for knowing what kind of conversations trigger the lower, more primitive brain; and what activates higher-level intelligences such as trust, integrity, empathy, and good judgment. Conversational Intelligence makes complex scientific material simple to understand and apply through a wealth of easy to use tools, examples, conversational rituals, and practices for all levels of an organization.

Before you can persuade others, you need to know how to listen and how to communicate. With the best of intentions, we can fall back into patterns and old habits that are less than ideal; it's just the way we're wired. Conversational Intelligence builds on the fundamental science of communication to help you achieve more attunement with others. If you're not getting the results you want, maybe it's time to give your 'C-IQ' a boost.
- Daniel H. Pink, best-selling author of Drive and To Sell Is Human

In Conversational Intelligence, Judith Glaser takes us on an insightful and in-depth discovery of how trust, the most basic human instinct, creates and fuels the foundation needed to transform cultures and companies. Trust, at its highest level, removes self and enables interactions and conversations to connect teams for higher performance and purpose.
- Angela Ahrendts, CEO of Burberry


Download link