Sunday, March 29, 2015

வெற்றியைத் தீர்மானிக்கும் எனர்ஜி! The Power of Full Engagement

வெற்றியைத் தீர்மானிக்கும் எனர்ஜி!

புத்தகத்தின் பெயர்: தி பவர் ஆஃப் ஃபுல் எங்கேஜ்மென்ட் (The Power of Full Engagement)

ஆசிரியர்கள்: Jim Loehr and Tony Schwartz, பதிப்பாளர்: Free Press

நாம் அறிமுகப்படுத்துவது 'தி பவர் ஆஃப் ஃபுல் எங்கேஜ்மென்ட்' என்னும் நம்முடைய எனர்ஜியை நிர்வாகம் செய்வதன் முக்கியத்துவத்தைச் சொல்லும் புத்தகத்தைத்தான்.

நாம் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம், வாழ்க்கை ஜெட் வேகத்தில் பறக்கிறது. நிறைய விஷயத்தை மேலெழுந்தவாரியாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதைப் பெரிதாக நினைத்துக் கொண்டாடுகிறோம். ஆழமாக ஒரு விஷயம் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என்பதை மனதில் வைத்தே செயல்படுகின்றோமே தவிர, எதிர்காலத்தில் வரப்போகிறவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்க முயல்வதில்லை. எங்கே போகவேண்டும், என்னவாய் ஆகவேண்டும் என்பது தெரியாமலேயே ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.

அலுவலகப் பணிகளைச் செய்யும்போது தினம் தினம் நம்மில் பெரும்பாலானோர் நம்மால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்தால் போதும் என்ற எண்ணத்திலேயே செயல்படுகிறோம். நம்மால் முடிவதைவிட அதிகமாகச் செயல்படவேண்டும் என்ற நிலை அலுவலகத்தில் தேவைப்படும்போது இரவு, பகல் பாராமல் வேலை செய்து அந்தக் காரியத்தை முடிக்க முயல்கிறோம். தூக்கம் தொலைத்து, சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, எக்கச்சக்க டீ, காபி குடித்து உடம்பை ஒட்டுமொத்தமாகக் கெடுத்துக் கொண்டுவிடுகிறோம். அப்புறம் உடம்பை கூல் செய்கிறேன் என்று பல காரியங்களில் இறங்கி, தூக்கம் வராவிட்டால் தூக்க மாத்திரை போட்டு தூங்கும் அளவுக்கு சில சமயம் சென்றும் விடுகிறோம்.

இப்படிப் பல சங்கடங்களை அலுவலகத்தில் சந்தித்து, அயர்ச்சியுடன் வீடு திரும்பினால் வீட்டில் இருப்பவர்களுடன் சகஜமாக இருக்கிறோமா என்ன? 'வள் வள்' எனப் பலரும் பல சமயம் வீட்டில் இருப்பவர்களிடம் கத்துகிறோம். அலுவலகத்தில் நாம் ஏற்றுக்கொண்ட அதிகச் சுமை வீட்டில் மகிழ்ச்சியை ரசிக்கத் தடுக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள், கூகுள் காலண்டர் எனப் பல்வேறு நினைவூட்டிகள் வேறு நம்மிடம் இருக்கிறது. நான் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உழைக்கிறேன் என தற்பெருமையாக வேறு பேசி திரிகிறோம்.

இருக்கும் நேரம் வேலைகளை முடிப்பதற்குப் போதவில்லை என்பதை உணரும் நாம் என்ன செய்கிறோம்? அன்றாடம் நமக்கு இருக்கும் 24 மணிநேரத்தில் அதிகபட்ச நேரத்தை வேலைக்கு ஒதுக்கிவிடுகிறோம் இல்லையா? இந்த முயற்சியில் நாம் ஒன்றை முழுவதுமாக மறந்துவிடுகிறோம். என்ன தெரியுமா? வேலைக்காக நாம் நாளின் 24 மணி நேரத்தையும் ஒதுக்கத் துணிந்தாலுமே அப்படி ஒதுக்கும் நேரத்தில் வேலையைத் திறமையாகப் பார்க்க நமக்கு எனர்ஜி வேண்டுமே! 24 மணிநேரம் என்பது நமக்கு முழுமையாக அளிக்கப்பட்டிருக்கும்போதும் அதற்குத் தேவையான எனர்ஜி என்பது நமக்கு முழுமையாகத் தயாராக இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு அதிமுக்கியமான அலுவலக மீட்டிங் நாலு மணி நேரத்துக்கு நடக்கிறது. இரண்டு மணிநேரத்துக்குப் பின்னால் உங்கள் எனர்ஜி குறைந்து எதிலும் மனம் நிற்கவே மாட்டேன் என்கிறது. இன்றைக்குக் காலை ஒன்பதிலிருந்து இரவு ஒன்பது மணிக்குள் இத்தனை வேலையை அலுவலகத்தில் முடித்தேயாகவேண்டும் என்று கிளம்புகிறீர்கள். மதியத்துக்கு மேல் உங்கள் எனர்ஜி லெவல் குறைந்து கோபமும் எரிச்சலும் தலை தூக்கினால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கு அன்றைக்குப் பிறந்த நாள். நினைவூட்டிகள் எல்லாம் உங்களுக்குச் சொல்கின்றன. ஞாபகமும் இருக்கின்றது. மாலை ஒரு டின்னருக்குக் கூட்டிச் செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் அன்றைக்கு எக்கச்சக்க வேலை. மாலை நீங்கள் அலுத்து களைத்து சளைத்துப் போய் வீடு திரும்புகிறீர்கள். டின்னருக்கு போகவேண்டுமா என்று உடல்நிலை கெஞ்சுகிறது. இதிலிருந்து தெரிவது என்ன?

சிறப்பாகச் செயல்படத் தேவையானது எனர்ஜிதானே தவிர, நேரம் இல்லை. அலுவலகமோ, வீடோ, பொது வாழ்க்கையோ சிறப்பாகச் செயல்பட நேரத்தைவிட மிகவும் முக்கியமானது எனர்ஜியேயாகும் என்கின்றனர் ஆசிரியர்கள். தேவையான அளவு எனர்ஜி கைவசம் இல்லாமல் எவ்வளவு நேரத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு செயலைச் செய்தாலும் அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

எந்த ஒரு விஷயத்திலும் எவ்வளவு நேரத்தை செலவு செய்தோம் என்பதைவிட எந்த அளவு எனர்ஜியை செலவு செய்தோம் என்பதைப் பொறுத்துத்தான், அது வெற்றியில் முடிகிறதா அல்லது தோல்வியில் முடிகிறதா என்பதே இருக்கிறது. இது குறித்து வாதிடும் ஆசிரியர்கள், இந்தப் புத்தகத்தில் நம்முடைய எனர்ஜியை எப்படித் திறமையாக நிர்வகிப்பதன் மூலம் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைச் சொல்லியுள்ளனர்.

முழுமையாக திறமையுடன் ஒரு வேலையைச் செய்ய முழு அளவிலான எனர்ஜி தேவை. இதனை புரொஃபஷனல் விளையாட்டு வீரர்கள் குறித்து ஆய்வு செய்யும் லிவிங் லேபரட்டரி யிலிருந்து நாங்கள் கண்டறிந்தோம் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். விளையாட்டு வீரர்களில் இயல்பாகவே திறமையானவர்களைக் கண்டறிந்து தேவையான பயிற்சியைக் கொடுத்தால் அவர்கள் சிறப்பான வெற்றியை கொண்டுவந்து குவிப்பார்கள் என்று விளையாட்டு உலகம் நினைக்கிறது. அது முழுமையான தவறாகும். எனர்ஜி மேனேஜ்மென்ட் அவர்களுக்கு மிக மிகத் தேவையான ஒன்றாகும் என்பதை உணர்ந்து நாங்கள் பல்வேறு பயிற்சிகளை அவர்களுக்கு அளித்து அவர்களைப் பரிமளிக்கச் செய்தோம்.

விளையாட்டு வீரர்களின் பயிற்சியை சற்று கூர்ந்து நோக்கியபோது தெரிந்த ஒரு விஷயமே, இதை அத்தனை மனிதர்களுக்கும் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது. விளையாட்டு வீரர்கள் தங்களுடைய 90 சதவிகித நேரத்தை பயிற்சியிலும் பத்து சதவிகித நேரத்தை பெர்ஃபார்மென்ஸுக்கும் செலவிடுகிறார்கள். அதிலும் பலருக்கு வருடத்தில் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரையில் ஆஃப் சீசனாக வேறு இருக்கிறது.

ஆனால், நம் வாழ்விலோ பெரும்பாலான நேரம் நாம் பெர்ஃபார்ம் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் தவிர, புரொஃபஷனல் விளையாட்டு வீரர்கள் அதிகபட்சம் பத்து வருட கேரியரையே கொண்டுள்ளனர். அதற்குள் அவர்கள் நன்றாகச் செட்டிலாகியும் விடுகின்றனர். நாமோ 40 ஆண்டுகள் வரையிலும் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

இந்த வகை நீண்ட பெர்ஃபார்மென்ஸுக்கு நமக்கு என்ன தேவைப்படும்? ஹெல்த் பெரிய அளவில் பாதிக்காமலும், குடும்ப குதூகலங்களை இழக்காமலும், வாழ்வின் மகிழ்ச்சியைத் தொலைக்காமலும் நாம் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் செய்யும் செயல் அனைத்திலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே முழு எனர்ஜியையும் பெற்று செயல்படுத்தி வெற்றி பெறமுடியும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த வகை ஈடுபாட்டைப் பெற தேவையான நான்கு வகை உத்திகளைச் சொல்வதே இந்தப் புத்தகம்.

முழு மனதான ஈடுபாட்டைப் பெற உடல் ரீதியாகவும், மூளை ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தனித்தனியாக நம்முள்ளே இருக்கும் எனர்ஜி அனைத்தையும் திரட்டவேண்டும் என்பதே ஆசிரியர்கள் சொல்லும் முதல் உத்தியாகும்.

எனர்ஜியை ஒரேயடியாக உபயோகித்தாலும், ஒரேயடியாக உபயோகிக்காமல் வைத்தாலும் அதன் திறன் குறைந்துபோகும். அதனாலேயே ஒரு சமச்சீர் அளவில் எனர்ஜி செலவீட்டையும், எனர்ஜி புதுப்பித்தலையும் நாம் சீராகச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது இரண்டாவது உத்தியாகும்.

அதிக எனர்ஜியை உற்பத்தி செய்ய அதிக அழுத்தம் தேவைப்படும். எப்படி உடற்பயிற்சி உடலுக்குப் பலத்தினைத் தருகிறதோ, அதேபோல அழுத்தம் நமது எனர்ஜி லெவலை உற்பத்தி செய்து நிலைநிறுத்திக்கொள்ள உதவும் என்பது மூன்றாவது மிக முக்கியமான உத்தியாகும்.

நான்காவதாக ஆசிரியர்கள் சொல்வது, இந்தப் பாசிட்டிவ் எனர்ஜியை உற்பத்திசெய்வதை ஒரு சடங்கு போல் மாற்றிக்கொள்வதை. பாசிட்டிவ் எனர்ஜி உற்பத்தி செய்வதை ஒரு சடங்கு போல் நாம் தொடர்ந்து செய்யப் பழகிக்கொண்டோமேயானால் சுலபத்தில் தேவையான எனர்ஜியுடன் தொடர்ந்து செயல்படமுடியும் என்று கூறுகின்றனர் ஆசிரியர்கள்.

இந்த நான்கு விஷயங்களையும் நம் வாழ்வில் கொண்டுவருவது கொஞ்சம் கடினம்தான். இந்த மாறுதலை நம் வாழ்வில் கொண்டுவர மூன்று நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலில், என்ன தேவை என்பதை நிர்ணயிக்கவேண்டும்; நாம் உண்மை நிலை என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்; இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்; அவ்வளவேதான் என்று கூறும் ஆசிரியர்கள், பல்வேறு நபர்கள் எப்படி இந்த முறையினால் பலனடைந்தனர் என்பதையும் விளக்கமாகச் சொல்லியுள்ளனர் இந்தப் புத்தகத்தில்.

அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையாகாது

The Power of Full Engagement: Managing Energy, Not Time, is the Key to High Performance and Personal Renewal


 

James E. Loehr, Tony Schwartz, "The Power of Full Engagement: Managing Energy, Not Time, is the Key to High Performance and Personal Renewal"
2003 | ISBN: 0743226747, 0743226755 | 256 pages | PDF | 3 MB

We live in digital time. Our pace is rushed, rapid-fire, and relentless. Facing crushing workloads, we try to cram as much as possible into every day. We're wired up, but we're melting down. Time management is no longer a viable solution. As bestselling authors Jim Loehr and Tony Schwartz demonstrate in this groundbreaking book, managing energy, not time, is the key to enduring high performance as well as to health, happiness, and life balance.

 The number of hours in a day is fixed, but the quantity and quality of energy available to us is not. This fundamental insight has the power to revolutionize the way you live your life. The Power of Full Engagement is a highly practical, scientifically based approach to managing your energy more skillfully both on and off the job.
At the heart of the program is the Corporate Athlete® Training System. It is grounded in twenty-five years of work with some of the world's greatest athletes to help them perform more effectively under brutal competitive pressures. Clients have included Jim Courier, Monica Seles, and Arantxa Sanchez-Vicario in tennis; Mark O'Meara and Ernie Els in golf; Eric Lindros and Mike Richter in hockey; Nick Anderson and Grant Hill in basketball; and gold medalist Dan Jansen in speed skating.
During the past decade, dozens of Fortune 500 companies have paid thousands of dollars to learn the Corporate Athlete training system. So have FBI swat teams, critical care physicians and nurses, salesmen, and stay-at-home moms. The Power of Full Engagement lays out the key training principles and provides a powerful, step-by-step program that will help you to:

• Mobilize four key sources of energy
• Balance energy expenditure with intermittent energy renewal
• Expand capacity in the same systematic way that elite athletes do
• Create highly specific, positive energy management rituals
Above all, this book provides a life-changing road map to becoming more fully engaged on and off the job, meaning physically energized, emotionally connected, mentally focused, and spiritually aligned.
 
Download Link: keep2share