Tuesday, June 30, 2015

ஹெல்மெட் - போலீசிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

மிழகத்தில் இன்று முதல், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவதுகட்டாயமாக்கப்பட்டு உள்ளது.கண்காணிப்பு பணியில், 1 லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவு:


* இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர், ஹெல்மெட் அணிந்து இருந்தால், தேவையில்லாமல் அவர்களைதொந்தரவு செய்யக்கூடாது.


* சாலையில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், சோதனை நடத்தக்கூடாது.


* ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு, எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து ஒரிஜினல்ஆவணங்களையும், பறிமுதல் செய்ய வேண்டும்.

* வாகனம் மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கான, ஒப்புகை சீட்டைகட்டாயம் வழங்க வேண்டும்.


* ஆவணங்களை, நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்க வேண்டும்; லஞ்சம் வாங்கி திரும்ப ஒப்படைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணம் கேட்கும் போலீஸ் பற்றிஅவசர போலீஸ் எண், '100'க்கு தகவல் தெரிவிக்கலாம்.


* ஹெல்மெட்டை, வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்து பயணித்தல், தொங்க விடுதல், பின் பக்கத்தில் பூட்டு போட்டு இருத்தல் கூடாது.


* அவ்வாறு செய்தால், ஹெல்மெட் அணியாதவர் என்றே கருதப்படும். அவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்.


* வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து, மாற்றுப்பாதையில்தப்பித்து விடாத வகையில், மறைவிடங்களில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.


* ஹெல்மெட் கண்காணிப்பை காரணம் காட்டி, சாலை விதிகளை மீறி செல்வோரையும் கோட்டை விட்டுவிடக் கூடாது.


* பெண்களும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்; அவர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டக் கூடாது.இவ்வாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப் போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேவையற்ற உயிரிழப்பை தவிர்க்க, ஜூலை 1ம் தேதி முதல் (இன்று) இரு சக்கர வாகன ஓட்டி கள், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அமல்படுத்த வேண்டியது போக்குவரத்து போலீசாரின் கடமை. அதை, 100 சதவீதம் அமல்படுத்துவோம்.


ஜார்ஜ், 
போலீஸ் கமிஷனர், சென்னை