Sunday, April 10, 2016

முன்னேற்றம் தரும் நேர மேலாண்மை!


புத்தகத்தின் பெயர்: ஆர்கனைஸ் டுமாரோ டுடே (Organise Tomorrow Today:  7 Way to Retain your Mind to Optimize Performance in Business and Life)

ஆசிரியர்: டாக்டர் ஜாசன் செல்க், டாம் பார்டோ(Dr Jason Selk and Tom Bartow)

பதிப்பாளர்: Da Capo Lifelong Books

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ஜாசன் செல்க் மற்றும் டாம் பார்டோ என்ற இருவர் இணைந்து எழுதிய 'ஆர்கனைஸ் டுமாரோ டுடே' எனும் புத்தகம்.    

இது மனதினை மாற்றி அமைக்கும் பயிற்சியை செய்வதன் மூலம் வேலையிலும் வாழ்க்கையிலும் செயல்திறனை எப்படி அதிகரிப்பது என்பதைச் சொல்லும் புத்தகமாகும். நவீன உலகில் வாழும் வாழ்க்கையில் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் நேரம் ஒதுக்குதல் என்பது நமக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதனாலேயேதான் அமேசானில் நேர மேலாண்மை குறித்த புத்தகங்கள் நிறைய குவிந்து கிடக்கிறபோதிலும், நேர மேலாண்மை செய்வது எப்படி என்று புத்தம் புது புத்தகங்களும் வெளிவருகின்றன. எக்கச்சக்கமான ஷெட்யூல் மேனேஜ்மென்ட் மற்றும் காலண்டர் சாஃப்ட்வேர்/ஆப்ஸ் போன்றவைகளை கைவசம் வைத்துக்கொண்டே நேரத்தை சரிவர மேலாண்மை செய்ய முடியாமல் நாம் இருக்கிறோம். 

இங்கே நம்முடைய மூளையின் திறன் குறித்து நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய மூளை அபரிமிதமான பலம் பொருந்தியது. அது யாருக்கும் தெரிவதில்லை. அதை எப்போதுமே நாம் செளகரிய மாக குறைத்து மதிப்பீடு செய்துகொண்டே இருக்கிறோம்.

ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நம்முடைய மூளை ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ஏழு விஷயங்களை மட்டுமே கவனத்தில் வைக்கவல்லது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது, மூளை ஏழு சேனல்களில் வேலை செய்யும்போது மட்டுமே தெளிவாக வேலை செய்யும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மற்ற போன் நம்பர்களைவிட ஏழு எண்கள் கொண்ட போன் நம்பர்களை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். 

ஆனால், ஏதாவது ஒரு விஷயத்தை ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தோம் என்றால் மற்றவற்றில் நாம் செலுத்தும் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பேல்-ஆக ஆரம்பிக்கிறது. குறிப்பாகச் சொன்னால், மூன்று விஷயத்துக்கு மேல் நாம் ஒரே நேரத்தில் செய்ய ஆரம்பிக்கும் போதே நாம் தடுமாற ஆரம்பித்து விடுகிறோம். அந்த சமயத்தில் நான்காவது விஷயம் ஒன்று உள்ளே வந்தால் அவ்வளவுதான். சிஸ்டம் ஓவர்லோடாகிவிடும். இதை 1956-ல் டாக்டர் ஜார்ஜ் மில்லர் என்பவர் ஆராய்ச்சி செய்து கண்டறிந்து சொன்னார்.

அன்றைக்கு பாக்கெட்டில் சூப்பர் கம்ப்யூட்டருக்கு ஒப்பான ஸ்மார்ட்போனும் இல்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் என்று எதுவும் இல்லை. இன்றைக்கு நிலைமையைப் பாருங்கள். எல்லோருமே ரொம்ப பிசியோ பிசி. போன், மெசேஜ், மீட்டிங் என கலந்து கட்டி அடிக்கிறோம். வீட்டையும் ஆபீஸையும் சேர்த்து கவனிப்பதற்குள் கண்முழி பிதுங்குகிறது. எந்த நேர மேலாண்மை சாஃப்ட்வேரும், எந்த ஷெட்யூலிங் காலண்டரும் மூளையின் இந்தப் பிரச்னையை சரிசெய்ய முனைவதில்லை. ஏனென்றால், அது அவைகளால் முடியாது. 
நம்மில் பலரும் பிசியாய் இருந்தால்தான் நாம் முக்கியப் புள்ளியாய் இருக்கிறோம் என நினைக்கிறோம். ஆனால், நிஜமாகவே முக்கியப் புள்ளிகளாக இருப்பவர்கள் பிசியாக இருப்பதேயில்லை. பிசியாக இருப்பது வேஸ்ட் ஆஃப் டைம் என்பது அவர்களுக்குத் தெரியும். செயல்திறனை அதிகரித்திருப்பதே புத்திசாலித்தனம் என்பது அவர்களுக்கு தெளிவாய்த் தெரியும்.

இந்தப் புத்தகம் நாளைய செயல்பாட்டை இன்றே ஏற் பாடு செய்யுங்கள், புத்திசாலித் தனமாகத் தேர்ந்தெடுங்கள், உங்கள் நேரத்தை அதிகப்படுத் திக் கொள்ளுங்கள், உங்கள் கேமை எப்போதும் வெல்லுங் கள், சரியாக கணக்குகளைப் போடுங்கள், எப்படி உங்களி டத்து நீங்களே பேசுவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள், மற்றவர்களிடம் எப்படிப் பேசு வது என்று கற்றுக்கொள்ளுங்கள், அசாதாரணமான மனிதனாக மாறிவிடுங்கள் என்ற எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட் டுள்ளது. 

அதிக வெற்றி பெரும் நபர்கள் எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் செய்து முடிக்க பிரியப்படுவதில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய அதிமுக்கிய விஷயங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிடுகிறனர். நாளைக்கு முடிக்கவேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் என்னென்ன என்ற கேள்வியை எழுப்புங்கள். பின்னர் அதில் மிக மிக முக்கியமான விஷயம் என்ன என்பதை தேர்ந்தெடுங்கள். அதை உங்கள் மூளையின் சேனல் ஒன்றில் சிந்தனைக்காக போட்டுவிடுங்கள் என்கின்றனர் ஆசிரியர்கள். 
சரி, இதை எப்போது செய்வது? இன்றைய நாளின் கடைசியிலா என்கிறீர்களா? அதுதான் இல்லை. இன்றைய தினத்தில் பாதியை கடக்கும்போதே இதை செய்ய ஆரம்பியுங்கள். அப்போதுதான் நிச்சயமாக உங்கள் இலக்கை அடைய முடியும். நாளின் இறுதி வரை தள்ளிச்சென்றுவிட்டால் திட்டமிட்டபடி அதனை முடிக்க முடியாது. 

நாளைக்கு கட்டாயம் செய்யவேண்டியதை இன்றைக்கே செய்துவிட்டால் அவசரம் என்பதோ, பதட்டம் என்பதோ வரவே வராது இல்லையா? இதில் நிச்சயம் செய்யவேண்டும் என்பது எதை என்பதை தேர்ந்தெடுப்பதற்குத்தான் அதிக புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.  
முக்கியமான ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை இன்றே செயலாக்குவதன் மூலம் மிகவும் கவனத்துடன் அதனை செய்யமுடியும்; அதனாலேயே அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது. முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய தடைக்கல்லே ஓவராய் நாம் கமிட்மென்ட்களை அள்ளிவிடுவது தான் என்கின்றனர் ஆசிரியர்கள். 

அதிலும் வேலை பார்க்கும் இடத்தில் வெற்றிகரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டோம் என்றால், கமிட்மென்ட்கள் ஓவாராய்த்தான் போய்விடும். மேலே மேலே போகவேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் கொடுக்கப்படும் ஓவர் கமிட்மென்ட்கள் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இடைஞ்சலாக மாறி பிரச்னைகளை உருவாக்கிவிடும். எப்படி இந்தப் பிரச்னை வரும் தெரியுமா? கமிட்மென்ட்களை அள்ளிவிடும் நமக்கு ஒரு கட்டத்தில் அவசரத்துக்கும், முக்கியமானதுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுவதால்தான். பல முக்கியமான விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு, அவசரமாக முடிக்கவேண்டிய விஷயங்களை கையாள ஆரம்பிக்கும் வேளையில் நமக்கு சரிவு வர ஆரம்பிக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

வெற்றிகள் குவியக் குவிய ஒரு முக்கியமானப் பிரச்னையை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.  சாதாரண மனிதராக நீங்கள் இருக்கும்போது ஒரு விஷயத்தை குறித்து முடிவெடுக்க நீண்ட நேரத்தை உங்களால் எடுத்துக்கொள்ள முடியும். அதே நீங்கள் வெற்றிப்பாதையில் வேகமாக பயணிக்கும்போது ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முடிவுகளை எடுக்க மிகக் குறைந்த நேரமே சிந்தனைக்கு கிடைக்கும். எந்த அளவுக்கு தொடர்ந்து வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனைக்கான சரியான நேர ஒதுக்கீட்டில் முடிவு செய்ய உங்களுக்குத் தெரியவேண்டும். 

இதற்கான நேரம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா என்று கேட்கும் ஆசிரியர்கள் அதற்கான பதிலையும் தருகின்றனர். ஒரு முக்கிய மீட்டிங் அடுத்த 15  நிமிடத்தில் இருக்கிறது. நீங்கள் அதில் கலந்துகொள்ளவேண்டும். தயாராக இருக்கிறீர்கள். அந்த 15 நிமிடத்தை எப்படி செலவழிப்பீர்கள்? பர்சனல் மெயிலுக்குள் போவது, ஃபேஸ்புக், ஆன்லைன் நியூஸ், ஷாப்பிங் சைட்டுகள், கூகுள் சர்ச்சுகள் போன்றவற்றில்தானே! இவை அத்தனையுமே நேரத்தை முழுங்கி ஏப்பம் விடும் அசுரன்கள். இவற்றின் பக்கம் போவதை தவிர்த்து அந்த நேரத்தையும் சேர்த்து சிந்தித்தால்தான் நீங்கள் சிறந்த செயலாற்றல் கொண்ட நபராக திகழமுடியும். 

சூப்பர் வெற்றி பெற பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் தேவையில்லை. அடுத்த மனிதர்களால் செய்ய முடியாத/விரும்பாத உபயோகமான விஷயங்களை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே வெற்றி பெறமுடியும். வெற்றிக்குத் தேவை கன்சிஸ்டன்சிதான். தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் அரக்கர்கள் சூழ்நிலைகளாக நம்மைச் சுற்றி திரிந்துகொண்டே இருப்பார்கள். இந்த அரக்கர்களை வென்றால் மட்டுமே வெற்றி என்பது திடீரென பொங்கிவரும். 

சாதாரணமானவர்கள் வெற்றி பெற ஆரம்பித்தவுடன் செயல்திறனை குறைத்துக் கொள்கின்றனர். ஆனால், சூப்பர் மனிதர்களோ அந்த வெற்றிக்கு காரணமான விஷயங்களை அதிகமாக செய்கின்றனர். 

ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். ஒவ்வொரு முறை சவால்களை ஜெயிக்கும் போதும் அடுத்து எதிர்கொள்ளப்போகும் சவாலை ஜெயிப்பது சுலபமாகிவிடுகிறது என்று முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.

அதிவேகமாக செயல்பட வேண்டியிருக்கும் இந்த உலகில் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படிக்கலாம்.

-




Organize Tomorrow Today: 8 Ways to Retrain Your Mind to Optimize Performance at Work and in Life by Jason Selk and Tom Bartow
English | 2015 | ISBN: 0738218693 | 240 pages | EPUB | 1,8 MB

How do both elite athletes and business leaders climb to the top? Contrary to what you might think, it's effective habits rather than innate talent that are their keys to success. Dr. Jason Selk—director of mental training for the 2011 World Series Champions, the St. Louis Cardinals—and star business coach Tom Bartow combine the most effective elements of both their disciplines to offer an organizational improvement plan that anyone can learn and apply immediately.

They outline eight fundamental ways to get organized, including the "time paradox," which allows precision to set your schedule free, and a two-minute mental training drill that will start your day with focus, confidence, and energy. Organize Tomorrow Today helps readers to move past their performance roadblocks and achieve more productive lives.



http://nitroflare.com/view/274F29BBA89558D/0738218693.epub