Monday, August 1, 2016

உள்ளுக்குள் ஓர் கடவுள்

உள்ளுக்குள் ஓர் கடவுள் 

கல்லீரல் எனும் கடவுளை சற்று கவனியுங்கள்.... 

கல்லீரலை பாதிக்கும் மதுவும் புகையும் வேண்டவே வேண்டாம்...

மதுவை குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும். உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல். 

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. 

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். 

இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்லவதற்கு. ஆமாம், ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறினால் அடுத்த நொடி மரணம் தான். 

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். இது மட்டும் கெட்டுவிட்டால் அந்த விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி மரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சேர்க்கும். 

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல' என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது. 

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கல்லீரல் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான் அதன்பின் அது எழுந்திருக்கவே எழுந்திருக்காது. அதனால் மதுவை மறந்து கல்லீரலை காத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம். 

இத்தகைய கல்லீரல் பாதிப்பிலிருந்து விடுபட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

# மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.

# பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம். அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு தான் விழுங்க வேண்டும்.

# பசியை நன்கு உணர்ந்தபின்னரே நமக்கு பிடித்த உணவை மட்டும் போதும் என்கிற உணர்வு வரும்வரை உட்கொள்ள வேண்டும். உணவை நிதானமாக மென்று அதன் சுவை நம் நாவால் உறிந்த பிறகு விழுங்க வேண்டும். சிறிது நேரம் களித்து தண்ணீரை வாய் வைத்து அருந்தலாம்.

# நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தூக்கம் வந்தால் தூங்க செல்வது அல்லது ஓய்வு எடுப்பது நல்லது.

# முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை தற்காலிக நிவாரணத்தையும் நிரந்தர துன்பத்தையும் தரக்கூடியவை.

# இரவ முடிந்தவரை விரைவாக தூங்க செல்லவேண்டும். 9 மணி அளவில் தூங்கச் சென்றால் சிறப்பாக இருக்கும்.

# தூங்கும் இடம் இயற்கை காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். கொசு தொந்தரவிருந்தால் காற்று வரக்கூடிய கொசுவலையை ஜன்னலில் மாட்டிக்கொள்ளலாம். குறிப்பாக கொசுவிரட்டிகள் உபயோகப்படுத்தக் கூடாது. 

இவற்றை பின்பற்றுவதால் பித்தம் நல்ல முறையில் சுரந்து நம் ரத்த குழாயில் படிந்துள்ள LDL (Low-density lipoprotein) கெட்ட கொழுப்புக்களையும் இலவசமாகவே கரைத்துவிடும். இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் தடுக்கப்படும். பித்த நரையும், மன அழுத்தமும் இன்றி ஆரோக்யமான வாழ்க்கையை வாழ முடியும்... 

மருத்துவர் அப்துல் சுக்கூர்.
8015483826.