Tuesday, December 20, 2016

சத்விரய பரிகாரம்

 
பெரியவாளின் 'சத்விரய' பரிகாரம்

(விரய காலம் என்று ஜோசியர் சொன்னதுக்கு) 

.
ஜாதகப்படி, பண விரய காலம்.
அஷ்டமத்தில் செவ்வாய் பார்வை-பக்தர்.

பக்தர் மேலும் சொல்கிறார்;

"அதற்கேற்றபடி, அநாவசியமான செலவுகள், உடல்நலப் பாதிப்பு, வைத்திய பரிசோதனை, மருந்து, கோர்ட் கேஸ், வியாஜ்யம், அப்பீல்.
பெண்ணுக்கு சீமந்தம், பிரசவம்..."

"என்னால் சமாளிக்கவே முடியலை.. பணச் செலவு ஒரு பங்கு என்றால்,மன உளைச்சல் மூணு பங்கு...அவ்வளவு மோசமான பீரியட்
என்கிறார் ஜோசியர். செலவு கட்டுக்கடங்காமல் போகுமாம்"

பெரியவாள் சொன்னார்கள்.

"உங்க தெரு கோடியிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.அதற்கு மதில் சுவர் கட்டு. உன் வீட்டு மாட்டுக்கொட்டிலை ரிப்பேர் பண்ணு.
பஞ்சாயதன பூஜை,பரமேஸ்வரனுக்கு வெள்ளி ரிஷப வாகனம் செய்....  இதே மாதிரி, சத்விரயம் ஆகட்டும்...."

விரயம் (பணச் செலவு) தவிர்க்க முடியாது என்பதால், இப்படி நல்ல செலவு ஆகட்டும் என்பது பெரியவாள்.கருத்து.

பக்தரும் அவ்வாறே செய்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்.