Sunday, January 8, 2017

விரதங்களும் பலன்களும்! பூஜைக்கு ஆகாத பூக்கள்!

விரதங்களும் பலன்களும்!

தெய்வங்களுக்கு உரிய திருநாட்களில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்:

திருவாதிரை: வினைகள் நீங்கும்

ஏகாதசி விரதம்: மனச் சாந்தி கிடைக்கும்

பெளர்ணமி: ஐஸ்வர்யம் பெருகும்

அமாவாசை: குலஅபிவிருத்தி ஏற்படும்

பிரதோஷம்: பாவங்கள் நீங்கும்

சங்கடஹர சதுர்த்தி: தீய எண்ணம் நீங்கும்

சஷ்டி: மகப்பேறு கிடைக்கும்

கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.

-

பூஜைக்கு ஆகாத பூக்கள்!

ஆமணக்கு இலைகளிலும் பனையோலைக் கூடைகளிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது! தவிர, வாசனை இல்லாத பூக்களும் ஏற்றதல்ல. விநாயகருக்குத் துளசி, சிவனுக்குத் தாழை, பார்வதிக்கு நெல்லிப் பூவும், சூரியனுக்கு அருகும், பைரவருக்கு நந்தியாவட்டையும், திருமாலுக்கு அட்சதையும் சார்த்தக்கூடாது!

-

அரச மரத்தை வலம் வரும்போது...

அரசமரத்தை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியவாறு வலம் வந்து வணங்கினால், பன்மடங்கு பலன் உண்டு.

மூலதோ பிரம்ம ரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய
விருட்ச ராஜா யதே நம: