Tuesday, April 9, 2013

கடாய் பனீர், பப்பாளி சாலட்

கடாய் பனீர்

தேவையானவை: பனீர் - கால் கிலோ, குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  

மசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2 டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை: மசாலா பொடி தயாரிக்க  கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2 குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து... பொடியாக நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி,  இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கி... எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

இது... சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.


பப்பாளி சாலட்

தேவையானவை: பப்பாளி - ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு,  தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பப்பாளியை 'கட்' செய்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப் பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.