Wednesday, October 23, 2013

குறை கூறிய வாயாலேயே வாழ்த்திவிட்டு வந்தோம்.


வசதியானவர்கள் வீட்டு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். ஆனால், உணவு பரிமாறும்போது கொஞ்சம் கொஞ்சமாக பரிமாறினார்கள். ஸ்வீட், வடை கூட 'வேண்டுமா' என கேட்டு, தேவை என்றவர்களுக்கு மட்டுமே பரிமாறினார்கள். 

குழந்தைகளுக்கு  எல்லா அயிட்டங்களையும் பரிமாறாமல்... சாதம், பருப்பு, ஒரு சில பொரியல் வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டது. 'சாப்பாட்டில் இப்படி சிக்கனம் பார்க்கிறார்களே... கல்யாண விருந்தில் கஞ்சத்தனம் செய்யலாமா' என்று  வருந்தியபடியே சாப்பிட்டோம்.

அப்புறம் தாம்பூலம் தரும் இடத்தில் இருந்த அறிவிப்பை பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது. அன்று மீதமாகும் உணவு அனாதை இல்லத்துக்கு செல்கிறதாம். அதனால் வீணாக்காமல் பரிமாறும்படி கூறியிருக்கிறார்கள். கவனமாக பரிமாறியதால் எல்லோர் இலையிலும் மிச்சம் இல்லாமலும் சாப்பிட்டதையும் பிறகு கவனித்தோம்.

குறை கூறிய வாயாலேயே வாழ்த்திவிட்டு வந்தோம்.