Saturday, February 1, 2014

மனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள்

மனோதத்துவப் புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருந்தேன்; அதில், மனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள் இதோ -

1.நீங்கள் செய்யும் வேலையில், குழந்தையின் உழைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; உதாரணம், சைக்கிள் துடைத்தல்.

2.நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு, எப்போதாவது உங்கள் மகனையும், அழைத்துப் போங்கள். 'அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்...' என்று, அவன் அறிந்து கொள்ளட்டும்.

3.குழந்தையிடம் அளவுக்கு மீறி செல்லம் காட்டாதீர்கள்; அதே சமயம், ரொம்பவும் ஆத்திரப்படாதீர்கள்.

4.குழந்தையைக் கட்டிப்பிடித்து விளையாடுங்கள். உங்கள் உடலோடு ஒட்டிப் பழகினால் பாசம் அதிகமாகும்.

5.குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது, அது நியாயமாக இருந்தால் விட்டுக் கொடுங்கள்.

* தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள்.
* பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள் .
* பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்.
* தினசரி பேப்பரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.
* தினமும் நண்பர்களுடன், காலையில், மூன்று மணி நேரமும், மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள்.
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!
- இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வெட்டியில்லாதவர்; உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.

பவானி ஆற்றில் நீச்சல் அடித்துவிட்டு குளிக்க வந்த கிராமத்து ஆசாமி ஒருவர், வேட்டி மடிப்பிலிருந்து, புது பொடி மட்டை ஒன்றை எடுத்தார். பொடியைக் கையில் கொட்டி, நீர் சேர்த்துக் குழைத்து, ஷாம்பூ போல தலையில் தேய்க்க ஆரம்பித்தார்.

அதிர்ந்து போய் அவரிடம் விவரம் கேட்டேன். 'பார்ட்டி' சொன்ன பதில் இது தான்:
பேன் தொல்லைங்க... மூக்குப் பொடி போட்டுத் தேய்ச்சு கழுவுனா, ஓடியே போயுடுமுங்க...

- முடியா, பேனா... கேட்கவில்லை நான்!