Sunday, January 8, 2017

விளம்பரமில்லா வீடியோ முதல் ரெயின்போ பேஜ் வரை...யூ-டியூபின் இந்த 6 ட்ரிக் உங்களுக்குத் தெரியுமா?


ஆபீஸ்ல வேலை பார்க்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பாட்டாலோ ....பாட்டு கேட்டுகிட்டே வேலை பார்க்கணும்னு நினைச்சாலோ...ஆட்டோமேட்டிக்கா விரல்கள் டைப் பண்ணுறது யூ-ட்யூப் தான். அந்த யூ- ட்யூப்ல உங்களை ஆச்சர்யப்படுத்தும் #YouTubeTricks உங்களுக்கு தெரியுமா? 

1. Doge Meme

யூ-ட்யூப் சர்ச் பார்ல ''Doge Meme''னு டைப் பண்ணுங்க உங்க யூ-ட்யூப் முழுவது வண்ணமயமா மாறிடும். எல்லாம் எழுத்துக்களும் கலர்ஃபுல் ஃபாண்ட்ல தெறி காட்டும்.

YouTubeTricks

2. ரிப்பீட்டு:

ஒரே ஒரு பாட்ட ரிப்பீட் மோட்ல கேக்கணும்னு நெனைச்சா நேரடியா ஆப்ஷன் எங்க இருக்குனு தேடிகிட்டே இருப்போம். ஆனா ரைட் க்ளிக் பண்ணி ''Loop'' கொடுத்தா போதும்ங்கறது பல பேருக்கு தெரியாத விஷயம். அப்படி இல்லன்னா  listenonrepeat.com ங்கிற இணையதளத்துல யூ-ட்யூப் லின்க் பேஸ்ட் பண்ணி ரிப்பீட் மோட் என்ஜாய் பண்ணலாம்.

யூ-ட்யூப் ட்ரிக்ஸ்

3. use the force luke:

யூ-ட்யூப் பக்கம் கசங்கிய பேப்பர் போல காட்சியளிக்க வேண்டும் எப்படியே வீடியோக்களையும் ரசிக்க வேண்டும் என்றால் use the force luke என யூ-ட்யூப் சர்ச்சில் டைப் செய்யுங்கள்...உங்க யூ-ட்யூப் பக்கம் கசங்கி இருக்கா?

4. do the harlem shake

do the harlem shake என யூ-ட்யூப்பில் டைப் செய்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு யூ-ட்யூப் பக்கம் ஷேக் ஆவதை உங்களால் பார்க்க முடியும். 

5. யூ-ட்யூப் கேட்கலாம்

 listentoyoutube.com என்ற இணையதளத்தில் நீங்கள் வீடியோவாக அல்லாமல் mp3-யாக கேட்க நினைக்கும் லின்க்கை அளித்தால் போதும் உங்கள் யூ-ட்யூப் வீடியோவை mp3யாக மாற்றித்தரும்.

6. விளம்பரம் வேண்டாம்:

ரொம்ப ஆர்வமா ஒரு யூ-ட்யூப் வீடியோ பார்க்கப் போகும் போதுதான் ஒரு விளம்பரம் வந்து தொந்தரவு செய்யும். அதிலிருந்து தப்பிக்க எந்த எக்ஸ்டென்ஷனும் போட வேணாம். ரொம்ப சிம்பிளா. யூ-ட்யூப் வீடியோ இருக்குற பேஜ்ல கூகுள் க்ரோமா இருந்தா Ctrl+Shift+J, ஃபயர் பாக்ஸா இருந்தா Ctrl+Shift+K டைப்  செய்யுங்க யூ ட்யூப் பக்கத்துல ஓப்பன் ஆகுற  டெவலப்பர்  கன்சோல்ல document.cookie="VISITOR_INFO1_LIVE=oKckVSqvaGw; path=/; domain=.YouTube";window.location.reload(); இந்த கோட பேஸ்ட் பண்ணுங்க. அப்பறம் என்ன விளம்பரம் இல்லா யூ-ட்யூப் வீடியோக்கள் தான்.