Wednesday, January 11, 2017

டிசைனர் பிளவுஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிளவுஸ்

டிசைனர் பிளவுஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!

அழகழகான, டிசைனர் பிளவுஸ்தான் எப்போதும் பெண்களின் முதல் சாய்ஸாக இருக்கும். 'நான் டிரண்டில் இருக்கிறேன்" என்பதை வெளிப்படுத்த இன்று பலவிதமான பிளவுஸ்கள் வந்துவிட்டன. சேலையை விட அதற்கு கான்டிராஸ்டாக, மேட்சாக என்று பல விதங்களில் பிளவுஸ் தேர்ந்தெடுக்கவே இன்று பெண்கள் அதிகம் கவனம் காட்டுகிறார்கள். பொங்கல் பண்டிகை, அதற்கு பிறகு தமிழ் புத்தாண்டு என்று பல பண்டிகைகள் வந்து கொண்டே இருக்கும் என்பதால் டிசைனர் பிளவுஸ் வாங்கும் முன்/தைக்கக் கொடுக்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிடுகிறார் சேலத்தைச் சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் தீபா.

* சேலையே ஒரு பிளவுஸ் டிசைனுக்கான அடிப்படை.நம்பகமான அல்லது பிடித்த தையல் கலைஞரிடம் முதலில் உங்களது சேலையின் கலர், பிளவுஸ்கான உங்களின் எதிர்பார்ப்பை பற்றி கலந்தாலோசித்து விடுங்கள். ஒருவேளை சேலை கிராண்டாக இருந்தால், பிளவுஸ் கட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். 

* சேலை சிம்பிளாக இருக்கும் பட்சத்தில் அதன் பிளவுஸ் கிராண்டாக இருக்க திட்டமிடலாம்.

* சேலையின் வண்ணம், அதில் உள்ள டிசைன் அடிப்படையில் ஏற்கனவே சேலையுடன் கொடுக்கப்பட்டுள்ள அட்டாச்சுடு பிளவுஸில் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கலாம். 

* லைட் கலர் சேலையாக இருக்கும்போது கான்ட்ராஸ்டு கலர் பிளவுஸ் அணிந்தால் ரிச்சான தோற்றம் தரும். பிளவுசில் நாம் செய்யப் போகும் வொர்க்கை திட்டமிடவும் சேலையே ஆதர்சம். 

* குந்தன், பீட்ஸ், ஸ்டோன் போன்ற ஹெவி வொர்க் பார்ட்டி வேர், திருவிழா ஆகியவற்றுக்கு செய்து போடலாம். இதற்கான செலவுகள் ரூ.1000த்தில் துவங்கி ரூ.20 ஆயிரம் வரை செய்யலாம். 

* பட்ஜெட் குறைக்க பேச் வொர்க், லேஸ், ரெடிமேட் பேச்சஸ், புரொக்கெட் மெட்டீரியல் பயன்படுத்தி பிளவுஸ் தோற்றத்தை கிராண்டாக்கலாம். 

* இன்றைக்கு டிரண்டில் இருப்பது நெட்டட் பிளவுஸ்கள். முழுவதும் நெட் வைத்து லைனிங்கில் சாட்டின் துணி கொடுத்து தைப்பது ஸ்பெஷல் லுக் தரும். 
 
* கழுத்து, கை மற்றும் பின் பக்கம் என இந்த நெட்டையே வெவ்வெறு இடங்களில் பேச் வொர்க் செய்தும் வித்தியாசப்படுத்தலாம். 

பிளவுஸ்

* நீங்கள் ஒல்லியாக இருப்பவராக இருந்தால், பிளவுஸின் முன் பகுதியில் அதிகமான வொர்க்குகளை வைத்து டிசைன் செய்யலாம். உடல் பருமனாக இருப்பவராக இருந்தால் பிளவுஸின் முன்பகுதியில் டிசைன்கள் வைத்து தைக்க வேண்டாம். அவை உங்களை உடல் அதிக பருமனாக காண்பிக்கும்.

* பிளவுசில் பிரின்சஸ் கட், கட் சோளி, நெக் பேச், காலர் நெக், புல் ஹேண்ட், திரீ போர்த்  என கை, கழுத்து, பின்புற டிசைன்கள் ஆகியவற்றில் புதுமை சேர்த்தும் டிசைனர் பிளவுசை கலக்கல் ஆக்கலாம். இது போன்ற டிசைனர் பிளவுஸ்களுக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை செலவளித்தால் போதும். 

சேலையைப் போலவே உங்களது தோற்றத்துக்கு ஏற்ப எந்த டிசைன் பிளவுஸ் போட்டால் எடுப்பாக இருக்கும், நச்சென்று பொருந்தும் என்பதையும் உங்களது டிசைனரை வைத்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும். 

* தோள்ப்பட்டை விரிவாக இருப்பவர்கள், ஷார்ட் ஸ்லீவ் அணிந்தால் தோள் பட்டை அகலமாக தெரியாது. அதே நேரம் பேடட் பிளவுஸ் அணிவது தோற்றத்தை அதிக விரிவாக காண்பிக்கும்.

* பட்ஜெட், டிசைன் போன்றவற்றை முடிவு செய்த பின்னரே அதற்கான கூடுதல் பொருட்களையும் வாங்கி மெருகேற்றுங்கள். நீங்கள் சேலை கட்டும் அழகை உங்களது பிளவுசே தீர்மானிக்கிறது. 

* சேலை சிம்பிளாக இருந்தால் கழுத்துப் பகுதியில் டிசைன்கள் வைத்த முழு நீளக் கை கொண்ட பிளவுஸ்கள் அணியலாம்.

(சிலருக்கு பழைய மாடல் பிளவுஸ்களே பிடிக்கக்கூடும். அவை புதிய வடிவிலும் கிடைக்கின்றன.)